Bright Zoom Today News
அக்டோபர் 10 மாலை நேரச் செய்திகள்
29ஆம் தேதி வரை நீட்டிப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - செய்திகள்...!!
உலகச் செய்திகள்
டெல்டா புயல்:
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் டெல்டா புயல் கரையை கடந்த நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது.
மாநிலச் செய்திகள்
ஆன்லைன் மூலம் தொடங்கியது:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கியது.
6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை:
வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அக்டோபர் 29ஆம் தேதி வரை:
மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் அக்டோபர் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விழாக்காலங்களில் விலை உயரும்:
வெங்காய வரத்து 40 விழுக்காடு குறைந்துள்ளதால் விழாக்காலங்களில் அதன் விலை உயரும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அரிய வகைப் பூக்கள் பூக்கத் தொடங்கியது:
உத்தரக்கண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் பிரம்ம கமலம் எனப்படும் அரிய வகைப் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
தொழில்நுட்பத்தை ஒழுங்குப்படுத்தும் மசோதா:
செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்பத்தை ஒழுங்குப்படுத்தும் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்:
வடக்கு அந்தமான் கடலில் அக்டோபர் 14ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
வரும் திங்கட்கிழமை ஆலோசனை:
வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம்:
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
குழாய் நீர் வழங்கும் மோடியின் கனவு திட்டம்:
கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர் வழங்கும் மோடியின் கனவு திட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெருமையை கோவா பெற்றுள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஆயுதபூஜைக்கு வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்:
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், ஆயுதபூஜைக்கு வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விளையாட்டுச் செய்திகள்
ஆன்லைன் மூலம் தொடங்கியது:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
ஐ.பி.எல் தொடர்:
நடப்பு தொடரின் 25வது லீக் போட்டியில் இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க;ர் அணிகள் மோதுகின்றன.
No comments: