Bright Zoom Today News
அக்டோபர் 12 உலகச் செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு - முக்கியச் செய்திகள்..!!
மாலை நேரச் செய்திகள்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு:
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. பால்.ஆர்.மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கும் ஏல கோட்பாடின் மேம்பாடு, ஏலத்திற்கான வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
புதிய செயற்கைக்கோள்:
சீனா, ஆப்டிகல் ரிமோட் சென்சிங் புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பியது.
மாநிலச் செய்திகள்
தமிழ்நாடு 2வது இடம்:
இந்தியாவில் அதிக முதலீட்டை ஈர்த்த 10 மாநிலங்களின் தர வரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 2வது இடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வரும் 14ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதி:
நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு:
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள்... அக்டோபர் 16ஆம் தேதி:
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
14 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
தமிழகத்தில் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 14 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி:
பா.ஜ.க முன்னாள் தலைவர்களில் ஒருவரும் குவாலியர் அரச மரபினருமான விஜயராஜே சிந்தியாவின் நூற்றாண்டு நினைவாக அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
முன்பணமாக 10,000 ரூபாய்... நிதி அமைச்சர் அறிவிப்பு:
விழாக்காலத்தையொட்டி முன்பணமாக 10,000 ரூபாய் வட்டியில்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
நடப்பாண்டில் 2-வது முறையாக...:
நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
பார்முலா-1 கார்பந்தயம்:
பார்முலா-1 கார்பந்தயத்தின் 11வது சுற்று போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன், அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்.
ஐ.பி.எல் தொடர்:
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்க;ர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
No comments: