Bright Zoom Today News
அக்டோபர் 22 மாலை நேரச் செய்திகள்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பு... புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
196 நாட்களுக்கு பின்:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 196 நாட்களுக்கு பின் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழுவினர் பூமிக்கு திரும்பியுள்ளனர்.
மாநிலச் செய்திகள்
அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த பரிசீலனை:
தமிழகத்தில் நடப்பாண்டில் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
நாடு முழுவதும் உள்ள 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2081.68 கோடி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
தொழில்நுட்ப சோதனை மையம்:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்ப சோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயலர் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.
விரைவில் மருத்துவ இடம் கிடைக்கும்:
தமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ இடம் கிடைக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையுடன் இணைப்பு:
நீர் மூழ்கிகளை தாக்கி அழிக்கும் வகையில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் கவராட்டி போர்க்கப்பல், இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி:
சுற்றுலா விசா தவிர பிற விசாக்களின் மூலம் இந்தியாவிற்குள் நுழைய வெளிநாட்டினர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
நாக் ஏவுகணையின் இறுதி பரிசோதனை:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய, பீரங்கி மற்றும் கவச வாகனங்களை தாக்க வல்ல நாக் ஏவுகணையின் இறுதி பரிசோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
மாவட்டச் செய்திகள்
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதையடுத்து நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வரும் 24ஆம் தேதி:
நெல் ஈரப்பத அளவு 17மூ-ல் இருந்து 22மூ ஆக உயர்த்த தமிழக அரசு கோரியதையடுத்து ஆய்வு செய்ய மத்திய குழு வரும் 24ஆம் தேதி தமிழகம் வருகிறது. இதனால் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை மற்றும் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விளையாட்டுச் செய்திகள்
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி:
இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியும், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் மோதவுள்ளன.
No comments: