Bright zoom Today News
இன்று அக்டோபர் 23 காலை நேரச் செய்திகள்
நாளை ரயில் சேவை... இரவு 11 மணி வரை நீட்டிப்பு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
பேஸ்புக், டிவிட்டர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்:
தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
துருக்கி பொருட்களை புறக்கணிக்க சவுதி அரேபியா முடிவு:
துருக்கி பொருட்களை புறக்கணிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு:
நோயாளிகளுக்கான சிகிச்சையில் இவர்மெக்டின் மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது.
நவராத்திரி பிரம்மோற்சவம்:
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ 8ஆம் நாளான இன்று சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக மலையப்ப சுவாமி காட்சியளித்தார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விசா அனுமதி வழங்க முடிவு:
வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கு விசா அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக, மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. உடனடியாக, இது அமலுக்கு வந்துள்ளது.
இந்திய கடற்படையில் முதல் முறையாக...:
டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, இந்திய கடற்படையில் முதல் முறையாக கடற்படையை சேர்ந்த லெப்டினன்ட் ஷிவாங்கி, சுபாங்கி மற்றும் தியா சர்மா ஆகிய 3 பெண் விமானிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
மாவட்டச் செய்திகள்
மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது. பண்டிகை விடுமுறையொட்டி இன்று மற்றும் நாளை ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி:
ஒகேனக்கல்லில் 7 மாதத்திற்கு பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் அறிமுகம்:
ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு 5 புதிய வகை இனிப்புகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஐதராபாத் அணி வெற்றி:
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
டென்னிஸ் போட்டி:
ஜெர்மனியில் நடைபெறும் கொலோன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
No comments: