Bright Zoom Today News
அக்டோபர் 27 காலை நேரச் செய்திகள்
மருத்துவப் படிப்பிற்கான... முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம்:
தென்னாப்பிரிக்காவில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் தற்போதைய காலத்திற்கும் ஏற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவ தளபதி நேபாளத்திற்கு பயணம்:
இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவணே நவம்பர் 4ஆம் தேதி முதல் 3 நாட்கள் நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
தமிழக அரசு அறிவுறுத்தல்:
கிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட வசதியாக, ஐந்து தனித்தனி குழுக்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி தெரிவிப்பு:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மூலம் ஆண்டுக்கு 24,000 கோடி ரூபாயை இந்தியா சேமிக்கிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
கேரள அரசு கடிதம்:
தமிழகத்தில் இருந்து வெங்காயம், தக்காளி உட்பட உணவு பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய கேரளா தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
2 2 பேச்சுவார்த்தை:
இன்று நடக்க உள்ள 2 2 பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று டெல்லி வந்தார்கள்.
மாவட்டச் செய்திகள்
எஸ்இடிசி பஸ்களில் முன்பதிவு:
ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்றவர்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எஸ்இடிசி பஸ்களில் முன்பதிவு செய்து சென்னைக்கு திரும்பினார்கள்.
புத்தம் புதிய
விளையாட்டுச் செய்திகள்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும்...:
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியை தோனியே தலைமைதாங்கி வழிநடத்த வாய்ப்பு இருப்பதாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 லீக் ஆட்டம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
No comments: