Bright Zoom Today News
அக்டோபர் 14 காலை நேரச் செய்திகள்
இன்று முதல் அமல்... தடையின்றி ரேஷன் பொருட்கள்... தமிழக அரசு அறிவிப்பு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
அதிபர் தேர்தல்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை:
இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்காலா, அமெரிக்க துணை அமைச்சர் ஸ்டீபன் பெய்கனுடன் ஆலோசனை நடத்தினார்.
மாநிலச் செய்திகள்
நவம்பர் 3ஆம் தேதி ஆலோசனை கூட்டம்:
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்து நவம்பர் 3ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் கனமழை:
ஹைதராபாத்தில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கார்களும், சரக்கு வேன்களும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன.
தமிழக அரசு அறிவிப்பு:
தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் இன்று முதல் திருத்திய வழிமுறைகள் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு:
கொல்கத்தாவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டபுள் டெக்கர் இரண்டடுக்கு பேருந்துகள் சாலைகளில் ஓடத் தொடங்கியுள்ளன. துர்க்கா பூஜையை முன்னிட்டு 2 டபுள் டெக்கர் பேருந்துகளை முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
மீண்டும் தேர்வு எழுதலாம்:
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வை எழுத தவறியவர்கள் அடுத்த ஆண்டு, மீண்டும் தேர்வு எழுதலாம் என மாணவர் சேர்க்கை வாரியம் அறிவித்துள்ளது.
அசல் மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் இன்று முதல் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு அனுமதி:
அக்டோபர் 15ஆம் தேதி முதல் பாதி அரங்கு நிரம்ப படக்காட்சிகளை திரையிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
வருகின்ற 20ஆம் தேதி முதல்...:
வருகின்ற 20ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை 392 பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
சி.எம்.டி.ஏ. ஒப்புதல்:
சென்னையில் பெரம்பூர், கவுதமபுரத்தில் 888 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் குடிசை மாற்று வாரிய திட்டத்திற்கு சி.எம்.டி.ஏ. ஒப்புதல் வழங்கியுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்:
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
சென்னை அணி வெற்றி:
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
No comments: