Bright Zoom Today News
அக்டோபர் 13 உலகச் செய்திகள்...
அரசு மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு... - காலைச் செய்திகள்..!!
காலை நேரச் செய்திகள்
ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி:
ஐரோப்பிய நாடான பெலாரசில் நடந்து வரும் போராட்டத்தை கட்டுப்படுத்த ஆயுதங்களை பயன்படுத்த போலீசாருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்:
இந்தியாவிற்கு சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கும் ஒப்பந்தத்திற்கு, ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 270 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மத்திய அரசிற்கு கடனாக வழங்கப்பட உள்ளது.
மாநிலச் செய்திகள்
சுயசரிதை புத்தகம்:
மறைந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பாலாசாகேப் விகே பாட்டீலின் சுயசரிதை புத்தகத்தை, பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று வெளியிடுகிறார்.
மத்திய அரசால் கடன் வாங்க இயலாது... அமைச்சர் தெரிவிப்பு:
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைக்காக, மத்திய அரசால் கடன் வாங்க இயலாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலையத்துறை உத்தரவு:
மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை சென்று வந்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்து இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க... அரசு முடிவு:
கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் ஐ.டி உட்பட தனியார் தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க கர்நாடக தொழில்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மாநில அரசு அனுமதி:
திரிபுராவில் திருத்தப்பட்ட வழிகாட்டுதலுடன் துர்க்கா பூஜை கொண்டாட அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மாவட்டச் செய்திகள்
6ஆம் கட்ட அகழாய்வுப் பணி:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்தாலும், ஏற்கனவே பாதி அளவில் தெரியவந்துள்ள கட்டுமானத்தின் முழு வடிவத்தையும் கண்டறிய மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்:
இதயம், நுரையீரலில் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள விரிவான சிறப்பு மையத்தை தொடங்குவதற்கு ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனையுடன், சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகல்:
டெல்லி கேப்பிடல்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இடது விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
பெங்க;ர் அணி வெற்றி:
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்க;ர் அணி வெற்றி பெற்றது.
No comments: