Bright Zoom Today News
நவம்பர் 12 காலை நேரச் செய்திகள்...!
நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது... தமிழக அரசு அதிரடி உத்தரவு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
இந்தியா-ஆசியான் 17வது உச்சி மாநாடு:
இந்தியா-ஆசியான் 17வது உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இணையவழியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசவுள்ளார்.
மாநிலச் செய்திகள்
ஊடக விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க தனிக்குழு:
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஊடக விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
பேருந்து போக்குவரத்து:
தீபாவளியையொட்டி தமிழ்நாடு-கர்நாடகா இடையே 6 நாட்களுக்கு மட்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
வரும் 16ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை:
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அனுமதி ரத்து:
சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் பணம் செலுத்த உத்தரவு:
புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச துணிகளுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த துணை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது:
மேற்குவங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு:
சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுமென திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
2,000 மினி கிளினிக்குகள்:
தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
திடீரென உயர்வு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமானங்களில் பயண கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடிக்கு செல்ல ரூ.3,000 முதல் 4,000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி:
கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கு செல்ல இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
அடுத்த ஆண்டு நடக்கும்:
இந்திய கால்பந்து அணியின் தகுதி சுற்று அடுத்த ஆண்டு நடக்கும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சோயிப் மாலிக், முகமது ஆமிர் அதிரடியாக நீக்கம்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக், முகமது ஆமிர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
No comments: