வரலாற்றில் இன்று பிப்ரவரி 21 வரலாறு : தமிழ் உயிருக்கு நேர்... இன்று உலக தாய்மொழி தினம்...!!

வரலாற்றில் இன்று பிப்ரவரி 21

வரலாறு : தமிழ் உயிருக்கு நேர்... இன்று உலக தாய்மொழி தினம்...!!

உலக தாய்மொழி தினம்


✍ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.


✍ உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்துவிட்டன. எனவே, அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது.மிர்ரா அல்ஃபாஸா


🌹 அன்னை (The Mother) என்று போற்றப்படும் ஆன்மிக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா (Mirra (Mirra Alfassa) ஆண்டு பிப்ரவரி 1878ஆம் பிப்ரவரி 21ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார்.



🌹 இவர் சிறுவயதிலிருந்தே ஆன்மிக நாட்டம் கொண்டிருந்தார். விவேகானந்தரின் 'ராஜ யோக" நூலைப் படித்ததன் மூலம் கிழக்கத்திய நாடுகளின் யோகமுறை குறித்து அறிந்தார்.


🌹 தன்னைப் போன்ற ஆன்மிகத் தேடல் கொண்டவர்களை இணைத்து 'தி நியூ ஐடியா" என்ற அமைப்பை உருவாக்கினார். இவருடைய குரு ஸ்ரீ அரவிந்தர் ஆகும். அரவிந்தரின் பெயரில் 1926ஆம் ஆண்டு ஆசிரமத்தை நிறுவினார். 


🌹 அரவிந்தர் இந்திய இளைஞர்களுக்கு புதுமையான முறையில் கல்வி வழங்க வேண்டும் என நினைத்தார். அதை பூர்த்தி செய்வதற்காக கல்வி மையங்களைத் தொடங்கினார். இவரது ஆன்மிக, அறப்பணிகளின் காரணமாக 'அன்னை" என்று போற்றப்பட்டார்.


🌹 இவரது அனைத்து செயல்களும் திரட்டப்பட்டு மொத்தம் 17 தொகுதிகளாக வெளிவந்தது. இவரது 22 ஆண்டு கால ஆன்மிக செயல்பாடுகளை 'தி மதர்ஸ் அஜெண்டா" நூல் விவரிக்கிறது.


🌹 மனிதகுல ஒருமைப்பாட்டை உருவாக்கிய 'அன்னை" மிர்ரா அல்ஃபாஸா 1973ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்

👉 1804ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி நீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. 

🐦 1918ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் (US) இறந்தது.





 


வரலாற்றில் இன்று பிப்ரவரி 21 வரலாறு : தமிழ் உயிருக்கு நேர்... இன்று உலக தாய்மொழி தினம்...!! வரலாற்றில் இன்று பிப்ரவரி 21  வரலாறு : தமிழ் உயிருக்கு நேர்... இன்று உலக தாய்மொழி தினம்...!! Reviewed by Bright Zoom on February 21, 2021 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.