இரத்த ஓட்ட மண்டலம் தொடர்பானது பொது அறிவு

 TNPSC CCSE-IV Exam 

 இரத்த ஓட்ட மண்டலம் தொடர்பானது


பொது அறிவு 

 உயிரியல் - இரத்த ஓட்ட மண்டலம்


இரத்த ஓட்ட மண்டலம்1


➤ இரத்த ஓட்ட மண்டலம் என்பது இதயம், இரத்தம், இரத்த குழாய்களை உள்ளடக்கியது. இம்மண்டலம் இரத்த ஓட்டத்தின் மூலம் ஆக்சிஜனையும், ஊட்டச்சத்துகளையும் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது.


➤ இதயம் மார்பு அறைக்குள், இரண்டு நுரையீரலுக்கும் இடையிலுள்ள மீடியாஸ்டினம் என்ற பகுதியில் வைக்கப்பட்டு இருக்கிறது.


➤ மனித இதயம், உள்ளீடற்ற நான்கு அறைகளோடு கூடிய கார்டியாக் தசையால் ஆன உறுப்பு. இது கூம்பு வடிவமானது.


➤ இதயத்தைச் சுற்றி இரட்டைச் சுவரினால் ஆன உறை உள்ளது. அதற்குப் பெரிகார்டியம் என்று பெயர். பெரிகார்டிய சவ்விற்கு இடைப்பட்ட பகுதி பெரிகார்டிய திரவத்தால் நிரப்பப்பட்டு இருக்கிறது. இது இதயத்தை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது.


இதயத்தின் நீள்வெட்டுத் தோற்றம்

➤ இதயம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது. இதயத்தில் ஏட்ரியம் என்று அழைக்கப்படும் இரண்டு மேல் அறைகளும், வெண்ட்ரிக்கிள் என்னும் தடித்த சுவரையுடைய இரண்டு கீழ் அறைகளும் உள்ளன.


➤ இதயம் ஏட்ரியோ-வெண்ட்ரிக்குலார் இடைச்சுவர் என்ற நீள்வட்டச் சுவரினால் வலப்பகுதி, இடப்பகுதி என பிரிக்கப்பட்டுள்ளது.


➤ இதயத்தின் வலப்பகுதி பெருஞ்சிரைகள் மூலம் ஆக்ஸிஜனற்ற இரத்தத்தைப் பெற்று ஆக்சிஜனேற்றமடைய நுரையீரலுக்குள் செலுத்துகிறது.


➤ இதயத்தின் இடதுப்பகுதி ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை நுரையீரல்களிடமிருந்து பெற்று, தமனிகள் மூலமாக உடலின் அனைத்துத் திசுக்களுக்கும் செலுத்துகிறது.


இதயத்தோடு தொடர்புடைய இரத்தக் குழாய்கள்


வலது ஏட்ரியம் :-

அ) மேற்பெருஞ்சிரை


ஆ) கீழ்ப்பெருஞ்சிரை


இ) கொரோனரி சிரை


வலது வெண்டிரிக்கிள் - நுரையீரல் தமனி


இடது ஏட்ரியம் - நுரையீரல் சிரைகள்


இடது வெண்டிரிக்கிள் - மகாதமனி


➤ ஒவ்வொரு இதயத்துடிப்பும், ஒரே சமயத்தில் இதயத்தின் இரண்டு பக்கங்களிலும் (மேல், கீழாக) உந்துதலை ஏற்படுத்தி இதயத்தை திறன்மிக்க உந்து உறுப்பாக உருவாக்குகிறது.


இதயத்தில் காணப்படும் வால்வுகள்


1. மூவிதழ் வால்வு : வலது ஏட்ரியத்திற்கும், வலது வெண்டிரிக்கிளுக்கும் இடையில் காணப்படுகிறது.


2. ஈரிதழ் வால்வு : இடது ஏட்ரியத்திற்கும், இடது வெண்டிரிக்கிளுக்கும் (மிட்ரல் வால்வு) இடையில் காணப்படும்.


3. அரைச்சந்திர வால்வு : நுரையீரல் தமனி, மகாதமனி புறப்படும் இடத்திலும் காணப்படுகிறது.


இரத்த ஓட்டம்:

இரத்த ஓட்டத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.


1. நுரையீரல் இரத்த ஓட்டம்

➤ இந்த வகை இரத்த ஓட்டம் உயிர்வளி இல்லாத இரத்தத்தை இதயத்தின் வலப்பக்கத்திலிருந்து நுரையீரலுக்கு எடுத்துச் சென்று, உயிர்வளி உள்ள இரத்தத்தை மீண்டும் இதயத்தின் இடதுபக்கத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறது.


2. பொது இரத்த ஓட்டம்

➤ இவ்வோட்டம் அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ள இரத்தத்தை இதயத்தின் இடது பக்கத்திலிருந்து உடல் திசுக்களுக்கு எடுத்துச் செல்கிறது(இதயம், நுரையீரல் தவிர). இச்சுற்று உடலின் திசுக்களில் உள்ள கழிவுகளைப் பெற்று உயிர்வளியற்ற இரத்தமாக மாறி இதயத்தின் வலது பகுதியை அடைகிறது.




பொது அறிவு -2

 உயிரியல் - இரத்த ஓட்ட மண்டலம்


இரத்தச் செல்கள்


இரத்தத்தில் 45மூ இரத்தச் செல்கள் காணப்படுகின்றன. இரத்தச் செல்கள் 3 வகைப்படும்.


அ. எரித்திரோசைட்டுகள் (சிவப்பணுக்கள்) (சுடீஊ)


ஆ. லுயுக்கோசைட்டுகள் (வெள்ளையணுக்கள்) (றுடீஊ)


இ. திராம்போசைட்டுகள் (இரத்தத் தட்டுகள்)


அ. எரித்திரோசைட்டுகள் : (சிவப்பணுக்கள்)


➤ இவை சிவப்பு நிறமுடைய இருபுறமும் குழியான தட்டுகளாகும். மனிதச் சிவப்பணு உட்கரு அற்றது.


➤ ஹீமோகுளோபின் என்ற சுவாச நிறமியைப் பெற்றிருப்பதினால், இது சிவப்பு நிறமுடையதாகக் காட்சியளிக்கிறது. இந்த வாயு பரிமாற்றத்திற்கு (உயிர்வளி மற்றும் கரியமில வாயுவைக் கடத்துவதற்கு) உதவுகிறது.


➤ ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 5 மில்லியன் இரத்தச் சிவப்பணுக்கள் காணப்படுகின்றன. இதன் வாழ்நாள் 120 நாள்கள். இவை கல்லீரலிலும், மண்ணீரலிலும் அழிக்கப்படுகின்றன.


ஆ. லுயுக்கோசைட்டுகள் (வெள்ளையணுக்கள்) (றுடீஊ)


➤ வெள்ளையணுக்கள் நிறமற்ற, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட மற்றும் உட்கரு உள்ள செல்கள். சிவப்பணுவை இணைத்துப் பார்க்கும்போது இவை எண்ணிக்கையில் குறைந்தவை. ஆனால், அளவில் பெரியவை. ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் சுமார் 8000 வெள்ளையணுக்கள் காணப்படுகின்றன.


➤ வெள்ளையணுக்கள் 5 வகைப்படும். அவை : மோனோசைட்டுகள், லிம்ஃப்போசைட்டுகள், நியு+ட்ரோஃபில்கள், 

இ. திராம்போசைட்டுகள் (இரத்தத் தட்டுகள்)


➤ திராம்போசைட்டுகள் இரத்தத்தில் மிதக்கும் தட்டு வடிவச் செல்களாகும். சிறிய உட்கரு அற்ற செல்களாகும். இவை 1 கன மில்லிமீட்டர் இரத்தத்தில் 2,00,000 முதல் 4,00,000 வரை எண்ணிக்கையில் காணப்படுகின்றன.


➤ இரத்தத் தட்டுகளில் உட்கரு இல்லை. இவற்றின் வாழ்நாள் ஒரு வாரம். இவை மேக்ரோபேஜ்களால் செரிக்கப்படுகிறது. இவை இரத்தம் உறைதலுக்கு உதவுகிறது.


இரத்தத்தின் பணிகள்


1. செரித்த உணவை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறது.


2. வளர்சிதை மாற்றத்தின்போது உண்டாகும் கழிவுப் பொருள்களைக் கழிவு நீக்க உறுப்புகளுக்குக் கொண்டு செல்கிறது.


3. நாளமில்லா சுரப்பிகளின் சுரப்பு பொருள்களை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறது.


4. உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்கிறது.


5. உடல் திசுக்களை ஈரமாக வைத்து கொள்கிறது.



 




 

இரத்த ஓட்ட மண்டலம் தொடர்பானது பொது அறிவு இரத்த ஓட்ட மண்டலம் தொடர்பானது    பொது அறிவு Reviewed by Bright Zoom on August 05, 2021 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.