காலை நேரச் செய்திகள் ஜனவரி 13 |Bright Zoom Today : Morning News January 12

காலை நேரச் செய்திகள்

ஜனவரி 13 |Bright Zoom Today :

Morning News January 12

வங்கிக் கணக்கு வாயிலாக வரி செலுத்தும் சேவை அறிமுகம் - காலைச் செய்திகள்..!!

உலகச் செய்திகள்

ரகசிய ஆவணங்கள்:


அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ராபர்ட் ஹுர் தலைமையில் விசாரணைக்கு குழு அமைத்து அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய/மாநிலச் செய்திகள்

கடும் குளிர் மற்றும் பனி:


டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவுவதால், டெல்லியில் ரயில், விமான சேவை பாதிக்கப்பட்டது.


உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது:


கேரளத்தில் ஆசிரியர்களை சார், மேடம் என அழைக்கக்கூடாது என்றும், டீச்சர் என்றே அழைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு முடிவு:


தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க நடப்பாண்டில் 10 லட்சம் டன் துவரம் பருப்பை தனியாா் வா்த்தகா்கள் மூலம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


சட்டசபை கூட்டத் தொடர்:


தமிழக சட்டசபை கூட்டத் தொடர், கடந்த 9ஆம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கிய நிலையில், இன்றுடன் (13.01.2023) நிறைவடைகிறது.


பாசுமதி அரிசியில் கலப்படம்:


பாசுமதி அரிசியில் கலப்படத்தை தவிர்க்கவும், அதன் தரத்தை உறுதி செய்யவும் பல்வேறு தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகளை மத்திய அரசு விதித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்

சாதனை படைத்துள்ளார்:


திருவாடானை அருகேயுள்ள அரநூற்றிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சின்னபெருமாள் என்பவர் திருக்குறளை 133 அடி நீள வெள்ளைக் காகிதத்தில் பல வண்ணங்களில் அழகுற எழுதியும், திருவள்ளுவா் உருவத்தை எழுத்துகளாலேயே வரைந்தும் சாதனை படைத்துள்ளார்.


ரேங்க் பட்டியல்:


சென்னையில் உள்ள கடற்கரைகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெசன்ட்நகர் கடற்கரை முதலிடமும், திருவான்மியூர் கடற்கரை இரண்டாமிடமும், மெரீனா கடற்கரை மூன்றாமிடமும் பிடித்துள்ளன.


நேரடி மற்றும் மறைமுக வரி:


சென்னை, சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் நேரடி மற்றும் மறைமுக வரிகளை தங்கள் வங்கிக் கணக்கு வாயிலாக எளிதாக செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

கபடி, சிலம்பம் விளையாட்டு:


தமிழகத்தில் கபடி, சிலம்பம் விளையாட்டுகளை உள்ளடக்கிய முதலமைச்சரின் கோப்பைக்கான போட்டிகள் ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இன்று தொடக்கம்:


சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் ஆடவருக்கான ஹாக்கி உலகக்கோப்பை தொடரின் 15வது பதிப்பு ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நடக்கும் ஆட்டம் ஒன்றில் இந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.


ஒரு நாள் கிரிக்கெட்:


இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.


 

காலை நேரச் செய்திகள் ஜனவரி 13 |Bright Zoom Today : Morning News January 12 காலை நேரச் செய்திகள்  ஜனவரி 13 |Bright Zoom Today :  Morning News January 12 Reviewed by Bright Zoom on January 13, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.