CTEC Exam, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு | Central Teacher Eligibility Test

CTEC Exam,

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு | Central Teacher Eligibility Test 

◆ மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test - CTET) என்பது இந்திய அரசின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகும்.

◆ இத்தேர்வு கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப் படுகிறது.

நோக்கம்

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களைப் பள்ளிக்குத் தேர்வு செய்யவேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வித் தகுதி

தாள்-1

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான (தாள்-1) தொடக்க நிலை பிரிவிற்கான தேர்வை எழுத கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்று, 2 வருட Elementary Education டிப்ளமோ படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்று 4 வருட Bachelor of Elementary Education (B.EI.Ed) முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் சிறப்புக் கல்வியியல் பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஏதேனும் ஓர் இளங்கலைப் பட்டப் படிப்புடன் Elementary Education பிரிவில் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தாள்-2

6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான (தாள்-2) தொடக்க நிலைப் பிரிவிற்கான தேர்வை எழுத கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும் .

பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Elementary Education பிரிவில் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்து அத்துடன் ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

NCTE விதிப்படி குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்று 4 வருட Bachelor in Elementary Education (B.EI.Ed.) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்று 4 வருட பி.ஏ., பி.எட் அல்லது பி.எஸ்சி., பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் சிறப்புக் கல்வியியல் பிரிவில் ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படும்.

கல்வியியல் பிரிவில் இளநிலை அல்லது டிப்ளமோ பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களும் CTET விண்ணப்பிக்கலாம். ஆனால், கல்வியியலில் தேர்ச்சி பெற்ற பின்னரே CTET தகுதிச் சான்றிதழ் செல்லுபடியாகும்.

தேர்வு முறை

முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும்.

சான்றிதழ்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் கொடுக்கப் படுகிறது.இச்சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு  செல்லுபடியாகும். விண்ணப்பதாரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தகுதித் தேர்வை எழுதலாம். தகுதி பெற்ற விண்ணப்ப தாரர்கள் தங்களது மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இத்தேர்வை மீண்டும் எழுதவும் அனுமதிக்கப் படுகிறார்கள்.


CTEC Exam, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு | Central Teacher Eligibility Test CTEC Exam,  மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு | Central Teacher Eligibility Test Reviewed by Bright Zoom on March 04, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.