பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில அசத்தல் டிப்ஸ் |Some Crazy Tips to Score High in Public Exams!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில அசத்தல் டிப்ஸ்.!

Some Crazy Tips to Score High in Public Exams!

Bright Zoom ,

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில அசத்தல் டிப்ஸ்.!  Some Crazy Tips to Score High in Public Exams!  Bright Zoom ,


பொதுத்தேர்வு! 

தமிழகத்தில் 10 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெற மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்!


திட்டம் வகுத்தல்

தேர்வு அட்டவணையின் படி, இந்த பாடத்திற்கு இத்தனை நாள் (அ) இவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என காலத்தை திட்டமிட்டு பயன்படுத்துதல், தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க உதவும்.


மனப்பாடம் கூடாது

படிக்கும் பாடத்தை எப்போதும் மனப்பாடம் செய்ய கூடாது. ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு படித்து, புரிந்துக்கொண்டு பின்னர் இந்த பாடங்களை எழுதி பார்த்தல் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.


ஓய்வுடன் படிப்பு

தேர்வுக்கு முன் பாடத்தை படிக்கையில், அவ்வப்போது ஓய்வு எடுப்பது அவசியம். உங்கள் மூளைக்கு தேவைப்படும் இந்த ஓய்வு, பாடங்களை சிரமம் இன்றி படிக்க உதவும். அந்த வகையில் 1 மணி நேரத்திற்கு 7 முறை 10 நிமிட ஓய்வு எடுத்தல் நல்லது.


அமைதியான சூழல் அவசியம்

பாடத்தை படிக்கையில் உங்களை சுற்றி தேவையற்ற சப்தங்கள் இருப்பின், பாடத்தில் முழுமையாக கவனத்தை செலுத்த முடியாது. எனவே, பாடத்தை படிக்கையில் வீட்டில் அமைதியான சூழல் நிலவ பெற்றோர் உதவ வேண்டும்.


நினைவுக் குறிப்பு

கேள்விக்கான பதிலை நினைவில் வைத்துக்கொள்ள நினைவுக் குறிப்புகளை தயார் செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாய், பாடத்தில் வரும் விஷயங்களை உங்களுக்கு பிடித்த பாடல், படத்துடன் தொடர்பு படுத்தி நினைவில் கொள்ளலாம்.


தேர்வுக்கு முன் மௌனம்

தேர்வு அறைக்கு செல்லும் முன் நண்பர்களுடன், தேர்வு குறித்தோ அல்லது வினாக்கள் குறித்தோ விவாதம் செய்வது வீணான மனக்குழப்பத்துக்கு வழிவகுக்கும். எனவே, தேர்வுக்கு முன் மௌனம் காப்பது நல்லது.


சிறு கேள்விக்கு முக்கியத்துவம்

தேர்வின் போது குறைந்த மதிப்பெண் கொண்ட கேள்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும். அந்த வகையில், 1 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகள் அனைத்திற்கு பதில் அளிப்பது நல்ல மதிப்பென் பெற உதவும்.


தெரிந்த கேள்விக்கு முதலிடம்

தேர்வின் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள உங்களுக்கு நன்றாகத் தெரிந்த கேள்விகளை முதலில் எழுதிவிடுங்கள். பதிலை யோசித்து எழுதும் படி இருக்கும் கேள்விகளுக்கு பதிலை பின்னர் எழுதுங்கள்.


பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில அசத்தல் டிப்ஸ் |Some Crazy Tips to Score High in Public Exams! பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில அசத்தல் டிப்ஸ் |Some Crazy Tips to Score High in Public Exams! Reviewed by Bright Zoom on March 04, 2023 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.