CTET தேர்வு ஏன்? எதற்க்காக நடத்தப்படுகிறது? | Why CTET exam? What is it being conducted for?

CTET தேர்வு ஏன்?  எதற்க்காக நடத்தப்படுகிறது? 

Why CTET exam?  What is it being conducted for?

Bright Zoom,  


CTET தேர்வு ஏன்?  எதற்க்காக நடத்தப்படுகிறது?  Why CTET exam?  What is it being conducted for? Bright Zoom,

CTET தேர்வு என்றால் என்ன?

CTET (மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு) எனப்படுவது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) இந்தியாவில் நடத்தப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஆகும்.


இத்தேர்வு ஏன் எழுத வேண்டும்?

CTET தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள், எந்தவொரு தனியார் பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளியிலும், ராணுவப் பள்ளியிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க விண்ணப்பிக்கலாம்.


எப்படி நடத்தப்படுகிறது?

ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் இந்த தேசிய அளவிலான தகுதித் தேர்வு, தேர்வாளர்களின் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நடத்தப்பட்டு, மிகவும் வெளிப்படையாக தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.


தேர்வின் நிலைகள்

CTET தேர்வானது அடிப்படையில் இரண்டு தாள்களை கொண்டது. 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க விரும்புவோர் தாள்-1 (Primary Level) எழுத வேண்டும். 6 முதல் 8 வகுப்புக்கு பாடம் எடுக்க விரும்புவோர் தாள்-2 (Upper Primary Level) எழுத வேண்டும்.


தாள்-1 கல்வித்தகுதி

CTET தேர்வின் தாள் -1 எழுத, ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை மற்றும் B.Ed-ல் 50% மதிப்பெண் பெற்றித்தல் வேண்டும் அல்லது கல்வியியல் சார்ந்த டிப்ளமோ படிப்பில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

தாள் -2 கல்வித்தகுதி

CTET தேர்வின் தாள் -2 எழுத, ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை மற்றும் B.Ed-ல் 50% மதிப்பெண் அவசியம். அல்லது கல்வியியல் சார்ந்த டிப்ளமோ படிப்பில் 50% மதிப்பெண் அல்லது 4 ஆண்டு இளங்கலை பட்டம் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.


வயது வரம்பு

எழுத வயது வரம்பு என எதுவும் இல்லை. போதிய கல்வித்தகுதியுடன் ஆசிரியர் பணியில் சேர விரும்பும் எவரும் இந்த தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வாளர்கள் ctet.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று, கோரப்படும் தகவல்களை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு கட்டணம் என்ன?

தாள் 1 (அ) தாள் -2, இதில் ஏதேனும் ஒரு தாளை எழுத விரும்பும் தேர்வாளர்களிடம் ரூ.1000 (General/OBC) அல்லது ரூ.500 (SC/ST) வசூளிக்கப்படுகிறது. இரண்டு தாள்களையும் எழுத விரும்பும் தேர்வாளர்களிடம் ரூ.1200 (General/OBC) அல்லது ரூ.600 (SC/ST) வசூளிக்கப்படுகிறது.


CTET தேர்வு ஏன்? எதற்க்காக நடத்தப்படுகிறது? | Why CTET exam? What is it being conducted for? CTET தேர்வு ஏன்?  எதற்க்காக நடத்தப்படுகிறது? | Why CTET exam?  What is it being conducted for? Reviewed by Bright Zoom on March 04, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.