மரபியல் படிக்க ஆசையா ? Do you want to study genetics?

மரபியல் படிக்க ஆசையா ?

Do you want to study genetics?

Bright Zoom,

மரபியல் படிக்க ஆசையா ? Do you want to study genetics? Bright Zoom,

மரபியல் genetics

◆ ஜெனிடிக்ஸ் என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து தோன்றியதாகும். மரபியலானது உயிரியலின் ஒரு பிரிவாகும்.

◆  மரபியல் என்பது      உயிர்வாழ் யிரினங்களின் மரபணுக்கள் இடையிலான வேறுபாடுகள் பற்றி படிக்கும் அறிவியல் துறையாகும்.

◆ மரபணு (ஜீன்) என்பது மரபுப் பண்புகளின் அடிப்படை அலகாகும். மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரையிலான மரபணுக்கள் உள்ளன. 

◆ இந்த மரபணுக்கள் தான் மரபுரீதியான குணங்களை சந்ததிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. 

◆ தோலின் நிறம், கண்களின் நிறம், தோற்றம், எண்ண ஓட்டம் போன்ற பரம்பரை குணங்கள் பெற்றோர்கள் மூலமாக சந்ததிக்கு கடத்தப்படுகின்றன.

◆  ஆரம்பகாலத்தில் மரபுப்பண்புகள் தொடர்பாக முன்னோர்கள் பெற்றிருந்த அறிவை விவசாயத்திற்கும், கால்நடைகள் வளர்ப்பிற்கும் பயன்படுத்தி வந்தனர்.

◆ இந்நிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் கிரகோர் மெண்டல் என்பவர் மரபியலின் அடிப்படை அம்சங்கள், உயிரினங்களின் இயல்புகள் உள்ளிட்டவற்றின் அலகுகளை கண்டறிந்தார். அவற்றிற்கு ஜீன்கள்' என பெயரிட்டார்.

◆ இத்துறையின் வளர்ச்சி தற்போது அதிகளவு உள்ளது. இத்துறை சார்ந்த படிப்புகளில் குரோமோசோம்களின் அமைப்பு, தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தோற்றம் உள்ளிட்டவற்றை ஆராயலாம். மேலும் ஆய்வு நிறுவனங்கள், எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு

◆ மரபியல் உதவியுடன் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. விலங்குகளில் செல்வர்க்கம் (குளோனிங்) தொடர்பான ஆய்வுகள் இத்துறையில் நடை பெறுகின்றன.

மரபியல் படிக்க ஆசையா ? Do you want to study genetics? Bright Zoom,1
தகுதிகள்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2ல் அறிவியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். உயிரியல், தாவரவியல், லைப் சயின்ஸ், விவசாயம், பயோடெக்னாலஜி, மருத்துவம் மற்றும் மைக்ரோபயாலஜி ஆகியவற்றில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது ஜெனிடிக் இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி, பயோகெமிக்கல் இன்ஜினியரிங் இவற்றில் ஒன்றில் பி.டெக்., படிக்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் எம்.எஸ்சி. ஜெனிடிக்ஸ் படிப்பை பல்வேறு நிறுவனங்கள் வழங்குகின்றன.

கல்வி நிறுவனங்கள்

● மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை (www.mkuniversity.org)

● எஸ்.ஆர்.எம்.,பல்கலைக்கழகம், சென்னை (www.srmuniv.ac.in )

● ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம், சென்னை (srmc.edu)

●  வி.ஐ.டி.,பல்கலைக்கழகம், வேலூர் (www.vit.ac.in)

●  சென்னை பல்கலைக்கழகம், சென்னை (www.unom.ac.in)

● ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் (www.andhrauniversity.info)

●  டில்லி பல்கலைக்கழகம், டில்லி (www.du.ac.in)

●  கேரள பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் (www.keralauniversity.edu)

● இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு (www.iisc.ernet.in)

வேலைவாய்ப்பு

இத்துறையில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆய்வு நிறுவனங்களில் ஆய்வாளராக பணியில் அமரலாம். கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் வேலை கிடைக்கும். இத்துறையில் பிஎச்.டி.,முடித்தவர்கள் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மரபியல் தொடர்பான ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவற்றில் உயர் அதிகாரிகளாகும் வாய்ப்பு உண்டு. வெளிநாடுகளில் இத்துறை முடித்தவர்களுக்கான பணி வாய்ப்புகள் மிகவும் அதிக அளவில் உள்ளன.


மரபியல் படிக்க ஆசையா ? Do you want to study genetics? மரபியல் படிக்க ஆசையா ? Do you want to study genetics? Reviewed by Bright Zoom on March 09, 2023 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.