10 வது ஆங்கில பொதுத்தேர்வில் 100 மார்க் வாங்க வேண்டுமா |Want to get 100 marks in 10th English exam

10 வது ஆங்கில பொதுத்தேர்வில் 100 மார்க் வாங்க  வேண்டுமா ?

Want to get 100 marks in 10th English exam?

35 எடுப்பதே சிரமம் என்று நினைப்பவர் களுக்கான எக்ஸாம் டிப்ஸ்!

Bright Zoom,

10 வது ஆங்கில பொதுத்தேர்வில் 100 மார்க் வாங்க  வேண்டுமா ?

English தேர்வில் ஈஸியா மார்க் எடுப்பது எப்படி?

பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் ஆங்கில தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க விரும்பும் மாணவர்கள் ஒரு சில தொடர் வழிமுறைகளை பின்பற்றினாலே நூறு மதிப்பெண் கூட எடுத்து விடலாம் என்று கூறுகிறார் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர். குறிப்பாக, வெறும் தேர்வுக்காக மட்டும் படிக்காமல், அட்டவணை போட்டு கேள்வி வாரியாக தயாராகினால் மதிப்பெண் குறைய வாய்ப்பே இல்லையாம்.


மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்கள்!

என்னால் படிப்பதை நியாபகம் வைத்து கொள்ள இயலாது. நான் பாஸ் ஆவதே சிரமம் என்று நினைக்கும் மாணவர்கள் கவலை பட வேண்டாம். Competency சார்ந்த கேள்விகளை எழுதியே நீங்கள் நல்ல மதிப்பெண் வாங்க முடியும். அதில்,

Question No 39 : விளம்பரம்(Ad)

Question No 41 : நோட்டீஸ் எழுதுதல்(Notice Writing)

Question No 42 : படம் பார்த்து அதை விவரிப்பது(Picture Description)

Question No 43 : குறிப்பு வரைதல்(Note Making) ஆகியவற்றை எழுதினாலே 20 மதிப்பெண்கள் கிடைத்து விடும்.

Comprehension கேள்விகள்!

அதே போல், சாலை வரைபடம்(Road Map) ஒரு இரண்டு மதிப்பெண். இதை கிட்டத்தட்ட தமிழில் வழிசொல்வது போலவே ஆங்கிலத்தில் எளிமையாக எழுத பழகி கொள்ளலாம். அதே போல்,

Question No 38 : 5 மதிப்பெண்ணுக்கான Comprehension கேள்வி இருக்கும்.

Question No 47 & 48 : இவற்றில் கேள்வி எண் 38 போலவே கேள்விகள் இருக்கும். ஒரு பத்தியை படித்து விட்டு அதற்குள் இருக்கும் வார்த்தைகளை அடையாளம் காண வேண்டும் அதற்கு 8 மதிப்பெண் கிடைக்கும்.

Question No 35 & 36 : வினாக்கள் போயம்(Poem) சார்ந்த கேள்விகள். அதில் போயம் வரிகளை கொடுத்து அதன் அர்த்தத்தை எழுத சொல்லி கேப்பார்கள். அதை முடிந்தளவு அப்படியே எழுதி கொஞ்சம் அர்த்தம் எழுத முயற்சித்தால் கூட ஒரு மதிப்பெண் பெற முடியும். அதே போல், 35வது கேள்வியிலும் 4 மதிப்பெண் வரை எடுக்க முடியும்.

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள்

நான் 90 மதிப்பெண்கள் எடுக்கிறேன். ஆனால், 100 எடுக்க முயற்சி செய்கிறேன். இருப்பினும் முடியவில்லை என்று நினைக்கிறீர்களா? ஒரு சில இடங்களில் கவனம் செலுத்தினாலே நீங்கள் நூறு மதிப்பெண் பெற்று விட முடியும். குறிப்பாக பலரும் கோட்டை விடுவது ஒரு மதிப்பெண் வினாக்களில்தான். எனவே,

Synonyms படிக்கும்போது Antonyms-ஐயும் படித்து அதன் அர்த்தத்தை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இரு பக்கமும் தெரிந்து கொண்டால் தவறவே தவறாது.

Plural Forms, Prefix, Sufix ஆகியவை புத்தகத்தில் இருப்பது மட்டும்தான் எப்போதும் கேட்கப்படும். எனவே, அதை மீண்டும் மீண்டும் எழுதி பார்த்தாலே மனதில் நின்று விடும்.

புதிதாய் கற்க வேண்டும்!

மாணவர்கள் தொடர்ந்து திருப்புதல் தேர்வுகளுக்கு மட்டுமே இந்த நேரத்தில் படித்து கொண்டிருப்பதால் கடிவாளம் கட்டப்பட்டவர்கள் போல, ஒரே விஷயத்தை மட்டுமே படிக்கிறார்கள். புதிதாக ஒன்றையும் படிப்பதில்லை. அதாவது, வெறும் திருப்பதல் தேர்வுக்கான கேள்வித்தாளை மனதில் வைத்து அதற்காக மட்டும் படிக்காமல் நேரம் ஒதுக்கி தனியாக எப்படி தயாராவது என்பதை மாணவர்கள் யோசிக்க வேண்டும்.


STEP 1 : உதாரணமாக ஒரு அட்டவணை போட்டு ஒவ்வொரு கேள்வி வாரியாக அதன் அனைத்து கூறுகளையும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிபிட்ட நேரத்திற்கு படிக்கலாம்.

STEP 2 : அதே போல், இன்று மூன்று கேள்விகளுக்கு ரிவிஷன் செய்கிறேன் என்றால் அதோடு சேர்த்து நாலாவது கேள்வியையும் படித்து கொள்ளும்போது உங்கள் மனதில் நின்று விடும்.

STEP 3 : இப்படியே கேள்வி வாரியாக போகும் போது நாம் எங்கு தப்பு செய்கிறோம் என்பது தெரிந்து விடும். மதிப்பெண் எப்படி குறைகிறது என்பதும் புரிந்துவிடும்.

STEP 4 : எனவே, ஒரு நாள் Poem மறுநாள் Grammar என அட்டவணை போட்டு ஒரு நாளுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

STEP 5 : இதனால் உங்களின் ஸ்பெல்லிங் தவறுகளையும் சரி செய்து கொள்ள முடியும்.


வினாத்தாளை பார்த்ததும் பயப்பட வேண்டாம்!

பலரும் வினாத்தாளில் முதலில் ஒரு மதிப்பெண் வினாக்களை பார்த்து அது தெரியவில்லை என்றாலே பதற்றம் அடைந்து விடுவார்கள். அதனால், முதலில் கேள்வித்தாளை பார்த்தவுடன் ஒரு மதிப்பெண்களை எழுதாமல், Competency கேள்விகளை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். இன்னும் தெளிவாக மாணவர்கள் எந்த வித தவறுகளும் இல்லாமல் எழுதி நல்ல மதிப்பெண் பெற முடியும்.

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நடைபெறும் தேதி மற்றும் அதற்கான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தியும் தேர்வில் பங்கேற்கலாம்.

10 வது ஆங்கில பொதுத்தேர்வில் 100 மார்க் வாங்க வேண்டுமா |Want to get 100 marks in 10th English exam 10 வது ஆங்கில பொதுத்தேர்வில் 100 மார்க் வாங்க வேண்டுமா |Want to get 100 marks in 10th English exam Reviewed by Bright Zoom on March 09, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.