NEET 2023 : இளநிலை நீட் தேர்வு நடைப்பெறும் தேதி அறிவிப்பு!
Junior NEET 2023 Date Notification!
NEET க்கு எப்படி விண்ணப் பிக்கணும் தெரியுமா?
Bright Zoom,
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்ப விரும்பும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின்(NTA) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
NEET UG 2023 விண்ணப்ப பதிவு!
நேற்று முதல் துவங்கியுள்ள நீட் தேர்வுக்கான விண்ணப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை திறந்திருக்கும். மாணவர்கள் இந்த தேதிக்குள் முழுமையாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்தியிருந்தால் மட்டுமே அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
NEET UG 2023 விண்ணப்ப கட்டணம்!
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவு மாணவர்களுக்கு 1700ரூபாய், ஓபிசி மற்றும் EWS பிரிவினை சேர்ந்தவர்கள் 1600ரூபாய் செலுத்த வேண்டும். அதே போல், SC/ ST/ PwD வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 1000ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
NEET UG 2023 தேர்வு நடைபெறும் தேதி!
நீட் இளநிலை 2023 தேர்வு மே 7ம் தேதி மதியம் 2மணி முதல் மாலை 5.20மணி வரை நடைபெறும் என அறிவிப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்வு ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments: