TNPSC Exam - 2023 திறனாய்வுத்தேர்வு - சராசரி | TNPSC Exam - 2023 Aptitude Test - Average
TNPSC (CCSE-2 (Group 2 + Group 2A, CCSE-4 (Group 4 + VAO), வங்கித் தேர்வுகளில் கணிதப் பிரிவில் 100% வெற்றி பெற உதவும் !!
Bright Zoom,
திறனாய்வுத்தேர்வு - சராசரி..!
1) மாணவர் ஒருவர் 5 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் முறையே 75, 86, 91, 65, 83 எனில், அவரின் சராசரி மதிப்பெண் என்ன?
விடை : 80
விளக்கம் :
சராசரி = கூடுதல் / எண்களின் எண்ணிக்கை (75+86 +91 +65 +83) / 5
= 400/5=80
சராசரி மதிப்பெண் = 80
2) 9, 6, 7, 8, 5 மற்றும் X ஆகிய வற்றின் சராசரி 8 எனில், x-ன் மதிப்பு காண்க?
விடை : 13
விளக்கம் :
மொத்த எண்கள் = 6
சராசரி = 8
சராசரி = கூடுதல் / எண்களின் எண்ணிக்கை
= (9+6+ 7+ 8+5+x)/6
8 = (35+x) / 6
8*6=35+x
48-35 = X
X = 13
3). முதல் 5 ஒற்றைப்படை எண்களின் சராசரி காண்க?
விடை : 5
விளக்கம் :
முதல் 5 ஒற்றைப்படை எண்கள் = 1, 3, 5, 7, 9
சராசரி = (1+3+5+7+9) /5
= 25/5 = 5
சராசரி =5
4. 1 முதல் 100 வரையிலான இயல் எண்களின் சராசரி காண்க?
விடை : 50.5
விளக்கம் :
1+ .......... + n வரையிலான
இயல் எண்களின் சராசரி
= (n + 1) / 2
எனவே, 1 + ... + 100
வரையிலான இயல் எண்களின் சராசரி = (100+1) /2
= 101/2
= 50.5

No comments: