நாமக்கல் 'அனோர்த்தோசைட்' பாறை மண்ணில் தடம் பதித்த சந்திரயான் - 3 Chandrayaan - 3 made a footprint on Namakkal 'anorthosite' rocky soil
நாமக்கல் 'அனோர்த்தோசைட்' பாறை மண்ணில் தடம் பதித்த சந்திரயான் - 3
Chandrayaan - 3 made a footprint on Namakkal 'anorthosite' rocky soil
Bright Zoom,
நாமக்கல்-'சந்திரயான் -- 3' விண்கலத்தில் பயணிக்கும், 'லேண்டர், ரோவர்' ஆகிய உபகரணங்கள் நிலவில் தடம் பதிப்பதற்கு முன், நாமக்கல்லில் உள்ள குன்னமலை கிராமத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 'அனோர்த்தோசைட்' பாறை மாதிரியில் இயக்கி, 'இஸ்ரோ' சோதித்து பார்த்த தகவல் வெளியாகி உள்ளது. ...
விண்வெளி துறையில், வல்லரசு நாடுகளுக்கு இணையாக போட்டி போடும், 'இஸ்ரோ' 2008 அக்., 22ல், 'சந்திரயான்- 1விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் வட துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு,நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது. தொடர்ச்சியாக, 2019ல் நிலவை மேலும் ஆய்வு செய்யும் வகையில், 'சந்திரயான் - 2' திட்டத்தை, 1,000 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ முன்னெடுத்தது. அதன்படி, நிலவின் மேற்பரப்பையும், தென்துருவ முனையையும் ஆய்வு செய்யும் வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டு, சந்திரயான் - 2 விண்கலம், 'ஜி.எஸ்.எல்.வி., எம்.கே., - 3' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான் - 2ல் உள்ள 'விக்ரம் லேண்டரின்' தொடர்பு துண்டிக்க இதனால் இந்த திட்டம் தோல்வியடைந்தது. முன்னதாக, சந்திரயான் - -2 விண்கலத்தில் உள்ள, 'லேண்டர், ரோவர்' ஆகியவை சரியாக தரையிறங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய, நிலவில் உள்ளது போன்ற மண் தேவைப்பட்டது.
அந்த மண் அமெரிக்காவின் நாசாவிடம் இருந்து, ஒரு கிலோ இந்திய மதிப்பில், 15,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால், 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் இந்தியாவில் அந்த வகை மண் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த வகை மண், நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகா, குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் கிடைப்பது தெரியவந்தது. இதையடுத்து, சேலம் பெரியார் பல்கலை புவியியல் துறை பேராசிரியர்கள் துணையுடன், சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை உள்ளிட்ட பகுதிகளில்
உள்ள மண் மாதிரிகளை ஆய்வு செய்தனர். அந்த மண்ணில் நிலவில் உள்ள மண் போல, 'அனோர்த்தோசைட்' பாறையைக் கொண்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மண் மற்றும்பாறைகள் என, 50 டன் அளவுக்கு, கர்நாடகா மாநிலம், உள்ள, 'இஸ்ரோ' மையத்துக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டன அந்த மண் மாதிரிகளை கொண்டு சிறப்பு ஆய்வகம் உருவாக்கப்பட்டு, 'சந்திரயான் - 2 ஆர்பிட்டர்' நிலவின் பரப்பில் பத்திரமாக இறக்குவதையும், 'லேண்டர், ரோவர்' ஆகியவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கி சோதித்து பார்த்தனர்.
அதன்படி, ஜூலை 14ல் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட, 'சந்திரயான்- 3'ல் உள்ள 'லேண்டர், ரோவர்'ஆகியவை பத்திரமாக தரையிறங்குகிறதா என்பதை, இஸ்ரோவிடம் உள்ள நாமக்கல் மண்ணை வைத்து பலகட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக மண் என்பது இளஞ்சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆனால், சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை பகுதியில் உள்ள மண், வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. இதனால், இந்த மண்ணை வைத்து,சந்திரயான் 2 மற்றும் 3 பரிசோதனை செய்தது நாமக்கல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments: