நிலவில் கனிம வளங்களை கண்டறிந்த இஸ்ரோவின் ரோவர்..! | ISRO's rover found mineral resources on the moon..!
நிலவில் கனிம வளங்களை கண்டறிந்த இஸ்ரோவின் ரோவர்..! ISRO's rover found mineral resources on the moon..!
நிலவில் கனிமங்கள்.!
Bright Zoom,
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் 27, 2023 அன்று, ரோவர் ஆனது 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை அதன் இருப்பிடத்திலிருந்து 3 மீட்டருக்கு முன்னால் கண்டுள்ளது. இதனால் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக பாதையை மாற்றுவதற்கு ரோவருக்கு கட்டளையிடப்பட்டது. இப்போது பாதுகாப்பாக புதிய பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இஸ்ரோ, தற்போது, நிலவின் தென் துருவத்தில் சல்பர், ஆக்சிஜன் ரோவரில் உள்ள LIBS ஆய்வு கருவி கண்டறிந்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஆக்சிஜன் கண்டறியப்பட்ட நிலையில், ஹைட்ரஜனை தேடும் பணியில் ரோவர் உள்ளது. இரும்பு, குரோமியம், டைட்டானியம், அக்னிசியம் சிலிக்கான் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளதையும் கண்டறிந்துள்ளது. LIBS கருவி பெங்களூருவில் உள்ள எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (LEOS)/ISRO ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

No comments: