திருக்குறள் பற்றிய அறிய தகவல்கள் | Information to know about Thirukkural
Bright Zoom,
திருக்குறள் பற்றிய அறிய தகவல்கள்.!
★ திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
★திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
★திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
★திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
★திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
★திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
★திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
★திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
★திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
★ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும் ஏழு சீர்களையும் கொண்டது.
★திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
★திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
★திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
★திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
★திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
★திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
★திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
★திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
★திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
★திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி
★திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை.
★திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ, ங
★திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)
★திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
★திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
★திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
★திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
★திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
★திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
★எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
★ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
★திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
★திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
★திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
No comments: