தொடக்ககால தேசியவாதிகளின் காலம் 1885-1915
The period of early nationalists 1885-1915
Bright Zoom,
தொடக்ககால தேசியவாதிகளின் காலம் 1885-1915.
★ தொடக்க கால தேசிய தலைவர்கள் சமூகத்தின் உயர் குடிப் பிரிவைச் சேர்ந்தோர் ஆவர்.
★ இத்தலைவர்கள் அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் 'மிதவாத தேசியவாதிகள் என்னும் புனைப் பெயரை பெற்றனர்.
★நாம் ஒரே நாடாக என்ற கருத்து வடிவம் பெற உதவியவர்கள் தொடக்க கால தேசியவாதிகள்.
★ மிதவாத தேசியவாதிகள் உண்மையாகவே இம்மண் சாரந்த காலனிய எதிர்ப்புச் சித்தாந்தத்தையும் தாங்களாகவே தங்களுக்கான ஒரு செயல் திட்டத்தையும் உருவாக்கிக் கொண்டனர்.
★The Medicant Policy -'இறைஞ்சுதல் கொள்கைக்கு உரியவர்கள் - மிதவாத தேசியவாதிகள்.
★'தீவிர தேசியவாதிகள்" என்று அழைக்கப்பட்டவர்கள் பிபின் சந்திர பால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய்.
★ இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போது அதன் உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியனராக இருந்தவர்கள் -பத்திரிகையாளர்கள்.
★இந்தியாவின் குரல் (Voice of India) மற்றும் ராஸ்த் கோப்தார் (Rast Goftar) எனும் இரு பத்திரிக்கைகளைத் தொடங்கி அவற்றின் ஆசிரியராகவும்ப ணியாற்றியவர் தாதாபாய் நௌரோஜி பெங்காலி (Bengali) என்னும் செய்திப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் சுரேந்திரநாத் பானர்ஜி கேசரி, மராட்டா ஆகியப் பத்திரிகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர்
★ தேசிய இயக்கத்தில் மத்தியதர வகுப்பினரும் விவசாயிகளும், கைவினைஞர்களும் தெழிளாளர்களும் மிக முக்கியமான பங்கினை வகிக்க முடியுமென திலகர் உறுதியாக நம்பினார்.
★இந்தியாவில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய எதிரப்புக்கு திலகர் அழைப்பு விடுத்தார்.
★1897ல் சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடந்தே தீருவேன்" என முழங்கியவர் திலகர்
★ 1897 ஜூலை 27ல் திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
★ திலகர் காங்கிரசில் தீவிர தேசியவாதிகள் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் கைது செய்யப்பட்டதை மிதவத தேசியவதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு பிரிவினரும் ஒருங்கிணைந்து எதிர்த்தனர்.
No comments: