தாதாபாய் நௌரோஜி
Dadabhai Naoroji
Bright Zoom,
தாதாபாய் நௌரோஜி
★ 'இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்' என
அறியப்படுபவர் - தாதாபாய் நௌரோஜி
★தாதாபாய் நௌரோஜி உருவாக்கிய அமைப்புகள்
●1865ல் லண்டனில் 'இந்திய சங்கம் (Indian Society)
●1866ல் கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association)
★ தாதாபாய் நௌரோஜி வகித்த பதவிகள்
●1870ல் தாதாபாய் நௌரோஜி பம்பாய்
●மாநகராட்சிக் கழகத்திறகும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
●1892ல் தாதாபாய் நௌரோஜி இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
●3 முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
★தாதாபாய் நௌரோஜியும் சுரண்டல் கோட்பாடும்
●ஶ்ரீ 1901ல் 'வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும்' எனும் புத்தகத்தை தாதாபாய் நௌரோஜி எழுதினார்.
★ தாதாபாய் நௌரோஜி 'வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும்' எனும் புத்தகத்தில் செல்வச் சுரண்டல் கோட்பாட்டை முன் வைத்தார்.
★ "எந்த நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட வரியை அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக செலவழிக்க வேண்டும். ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர் வசூலிக்கும் வரி இங்கிலாந்தின் நனுக்காகச் செலவு செய்யப்படுகிறது" எனக் கூறியவர் - தாதாபாய் நௌரோஜி
★ தாதாபாய் நௌரோஜி ஆங்கிலேயர்களால் தாயகக் கட்டணம் (Home Charges) எனும் பெயரில் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்துவதாக கூறினார்.
★ 1835-1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன் பவுண்டுகள் மதிப்படையப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் ஆனால் அந்த அளவிற்குப் பணம் இந்தியா வந்து சேரவில்லை எனவும் தாதாபாய் நௌரோஜி கூறினார்.
★ தாயகக் கட்டணத்தில் (Home Charges) சேருவது
● லண்டனில் வாழும் கம்பெனியின்
பங்குதாரர்களுக்கு லாபத்தில் பங்கு
● இரும்புப் பாதைத் துறையில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டி
● பணி நிறைவு பெற்றுவிட்ட அதிகாரிகளுக்கும் தளபதிகளுக்கும் ஓய்வூதியம்
● நாடுகளைக் கைப்பற்ற மேற்கொள்ப்பட்டப் போர்களுக்காக இங்கிலாந்திடமிருந்து பெற்ற கடனுக்கு வட்டி
No comments: