சென்னை வாசிகள் சங்கம் & சென்னை மகாஜன சங்கம் Madras Native Association (MNA) & Madras Mahajana Sabha - MMS)
சென்னை வாசிகள் சங்கம் & சென்னை மகாஜன சங்கம்
Madras Native Association (MNA) & Madras Mahajana Sabha - MMS)
தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள்
Gandhijis in South Africa
Bright Zoom,
சென்னை வாசிகள் சங்கம்
Madras Native Association (MNA)
◆ சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு - பிப்ரவரி 26, 1852.
◆ சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் - கஜூலா லட்சுமிநரசு
◆பிப்ரவரி 26, 1852 சென்னை மாகாண நிலவுடைமை வணிக வர்க்கத்தினரால் நிறுவப்பட்ட இயக்கம் - சென்னை வாசிகள் சங்கம்.
◆ இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி - முறைகள் வேளாண் வர்க்க துன்பங்களை சுட்டிக் காட்டியது.
◆ ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை சாரந்த தலையீட்டிலிருந்து விவசாயிகளை விடுவிக்கப் பண்டைய கிராம முறை மீட்டெடுக்கப்பட வேண்டுமென சென்னை வாசிகள் சங்கம் வற்புறுத்தியது.
◆ நீதித்துறையானது தாமதமாக செயல்படுவதாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் குறைபாடுகளுடையதாகவும் இருப்ததாக புகார் கூறியது.
◆ நீதிபதிகளின் நியமனத்தின் போது அவர்களின் துறைசார் அறிவு திறனும் வட்டார மொழிகளில் திறமையும் மதிப்பீடு செய்யப்படாததால் நீதித்துறையின் திறமை பாதிக்கப்படுவதை சுட்டிக் காட்டியது.
◆ மானிய உதவித் திட்டத்தின் கீழ் சமயப் பரப்பு நிறுவனங்களின் கல்விக் கூடங்களுக்கு அரசின் நிதி மடை மாற்றம் செய்யப்படுவதும் எதிர்த்தது.
◆ சென்னை வாசிகள் சங்கத்தின் மனு இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் மார்ச் 1853ல் விவாதிக்கப்பட்டது.
◆ அக்டோபர் 1853ல் இந்தியச் சீர்திருத்தக் கழகத்தின் தலைவர் D.செய்மோர் சென்னை வந்து குண்டூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்.
◆ இருந்த போதிலும் 1853ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் இந்தியாவில் ஆஙகிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சித் தெடர அனுமதி வழங்கியது.
◆ இந்தியாவில் கம்பெனியின் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையைக் கொண்ட 14000 நபர்கள் கையழுத்திட்ட இரண்டாவது மனுவை ஆங்கிலேயப் பாராளுமன்றத்திறாகு சென்னை வாசிகள் சங்கம் அனுப்பி வைத்தது.
◆ சென்னை வாசிகள் சங்கத்தின் ஆயுட்காலம் குறைவானதே.
◆ 1866ல் கஜூலா லட்சுமிநரசு இயற்கை எய்தியதால், அமைப்பு இல்லாமல் போனது.
◆ தனது வாழ்நாளில் இவ்வமைப்பு சென்னை மாகாண எல்லைகளுக்குள்ளாக மட்டுமே செயல்பட்டது.
◆ இவ்வமைப்பு தனது மனுக்கள் மூலம் சுட்டிக்காட்டிய குறைபாடுகளும், நடத்தியப் போராட்டங்களும் செல்வந்தர்களின் குறிப்பாகச் சென்னை மாகாண நிலவுடமையாளர்களின் எண்ணத்தின்படி நடந்தவையாகும்
◆ குறைபாடு யாதெனில் தேசிய காங்கிரஸ் நிரப்பிது.
""""""""""""""""
சென்னை மகாஜன சங்கம்
Madras Mahajana Sabha - MMS)
◆ சென்னை மகாஜன சங்கம் மே 16, 1884ல் நிறுவப் பெற்றது.
◆ சென்னை மகாஜன சங்கம் தெடக்க விழா 1884 மே 16ல் நடைபெற்றது.
◆ சென்னை மகாஜன சங்க தெடக்க விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்
◆ சுப்ரமணியம், சேலம் ராமசாமி, வீரராகவாச்சாரி, அனந்த சார்லு, ரங்கையா, பாலாஜி ராவ்
◆ சென்னை மகாஜன சங்க தலைவர்கள் 1885ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டு சென்னை மகாஜன சங்கத்தை இந்திய தேசிய காங்கிரசோடு இனைத்தனர்.
No comments: