இரயில்வே தேர்வு - 2018 : பொது அறிவு

இரயில்வே தேர்வு - 2018 : பொது அறிவு

உயிரியல் - விலங்குகளின் பயன்கள்

விலங்குகளின் பயன்கள் :

விலங்குகளும் அவற்றிலிருந்து பெறப்படுகின்ற பொருள்களும் மனிதனுக்குப் பல வகைகளில் பயன்படுகின்றன. விலங்குகளின் உபயோகத்தைப் பொருத்து அவை மூன்று வகைப்படும்.

உணவு தரும் விலங்குகள் :

 பால், முட்டை மற்றும் இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பசு இனங்கள் முக்கியமாக அவை தரும் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. 

எ.கா. ஜெர்சி. சில ஆட்டினங்கள் அதன் பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.

தேனீக்கள் நமக்குத் தேனைக் கொடுக்கிறது. மீன் இனங்கள் புரதம் சார்ந்த உணவிற்கு ஒரு நல்ல மூலமாக உள்ளன.

உரோமம் தரும் விலங்குகள் :

செம்மறி ஆடு, வெள்ளாடு, லாமா என்ற ஒரு வகை கம்பளி ஆடு போன்ற விலங்குகள் நமக்கு உரோமத்தைத் தருகின்றன. இந்த உரோமங்களை சரியான முறையில் பதப்படுத்தி கம்பளி தயாரிக்கப்படுகிறது.

பட்டுப்புழு நமக்குப் பட்டு இழையினைத் தருகிறது.

இழுவை விலங்குகள் :

 ஏர் உழுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படும் விலங்குகள் இழுவை விலங்குகள் ஆகும். 

எருது, காளைமாடு (காங்கேயம்) குதிரை, யானை, கழுதை போன்ற விலங்குகள் விளை நிலங்களை உழுவதற்கும், போக்குவரத்திற்கும் உபயோகப்படுகின்றன. 

சில பசுக்கள் ஒரு நாளுக்கு 16 லிட்டர் பால் அல்லது ஒரு வருடத்திற்கு 6000 லிட்டர் பாலைத் தருகின்றன. 

 ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், ஆட்டில் இருந்து உரோமத்தைக் கத்தரிக்க ஒரு புதுமுறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

தோலினைச் சேதப்படுத்தாமல் கம்பளியை எடுக்கும் இந்தப் புதிய முறைக்குப் 'பயோகிளிப்" என்று பெயர்.

தூயபட்டு என்பது பட்டுப்பூச்சியிடமிருந்து கிடைக்கும் மிருதுவான இயற்கை இழை ஆகும். இது 'இழைகளின் இராணி" எனவும் அழைக்கப்படுகிறது. 

சிந்தனை துளிகள் :

 ஒளியானது நேர்கோட்டில் செல்வதால்தான் நிழல் ஏற்படுகிறது. ஒளியின் நேர்கோட்டு இயக்கத்தால்தான் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. 

சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது கிரகணங்கள் உண்டாகின்றன.

சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப் பொருள். அது சூரியனிடமிருந்தே ஒளியைப் பெற்று ஒளிர்கின்றது.

சூரிய ஒளி புவியை வந்து அடைவதற்கு 8 நிமிடம் 20 விநாடி ஆகிறது.

 சூரிய ஒளியை வெறும் கண்களால் நேரிடையாகப் பார்க்கக் கூடாது. பார்வை பாதிக்கப்படக்கூடும்.

இரயில்வே தேர்வு - 2018 : பொது அறிவு இரயில்வே தேர்வு - 2018 : பொது அறிவு Reviewed by Bright Zoom on March 13, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.