உலக வரலாற்றில் இன்று - (06.04.2018) நடந்த முக்கிய நிகழ்வுகள்!

உலக வரலாற்றில்
இன்று  - (06.04.2018)
நடந்த முக்கிய நிகழ்வுகள்! 




 சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்


விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையை ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். இது வளர்ச்சி, அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ளூர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது. 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திருச்சியில் பிறந்தார்.

இவர் சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து, பல இலக்கியங்களைப் படைக்க தொடங்கினார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் பிள்ளைத் தமிழ் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார்.

இவர் ஏராளமான தல புராணங்களை பாடியுள்ளார். இவரிடம் பயின்றவர்களில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 மாயூரம் வேதநாயகம் பிள்ளையை பாராட்டி குளத்துக்கோவை என்னும் நூலை இயற்றினார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு மகாவித்வான் என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.


19ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தனது 60வது வயதில் (1876) மறைந்தார்.


முக்கிய நிகழ்வுகள்:

கிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.

1782 – தாய்லாந்து மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான். முதலாம் ராமா மன்னனாக முடி சூடினான்.

1814 – நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் தமது கடைசிச் சமரை வடக்கு வேர்ஜீனியாவில் நடத்தினர்.

1869 – செலுலோயிட் கண்டுபிடிக்கப்பட்டது.

1896ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி 1500 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதன்முறையாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமாயின.

1909ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பல கல்விச்சாலைகளை நிறுவிய டாக்டர் அழகப்ப செட்டியார், சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் பிறந்தார்.


1917 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.

1919 – மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.

1936 – ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் கொல்லப்பட்டனர்.

1938ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை ஆர்வலர் கோ.நம்மாழ்வார் பிறந்தார். 

1941 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா மற்றும் கிரேக்கத்தை ஜெர்மனி முற்றுகையிட்டது.

1947ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்டது. 

1965 – “ஏளி பேட்” (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.

1968 – இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.

1973 – பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1994 – ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டாவில் இனப்படுகொலைகள் ஆரம்பமானது.

1998 – இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.

2005 – குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அதிபரானார்.

பிறப்புகள்:

1483 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர் (இ. 1520)

1815 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1876

1901 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலிய ஆர்வலர் (இ. 1925)

1928 – ஜேம்ஸ் டூயி வாட்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

1931 – சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (இ. 2014)

1938 – கோ. நம்மாழ்வார், இயற்கை ஆர்வலர் (இ. 2013)

1956 – திலீப் வெங்சர்கார், இந்தியத் துடுப்பாளர்

1963 – ராஃபாயெல் கொறேயா, எக்குடோர் அரசுத்தலைவர்

இறப்புகள்:

1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (பி. 1157)

1520 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர் (பி. 1483)

1528 – ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர் (பி. 1471)

1971 – இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, உருசிய-அமெரிக்க இசையமைப்பாளர் (பி. 1882)

1992 – ஐசாக் அசிமோவ், உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1920)

2011 – சுஜாதா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1952)





உலக வரலாற்றில் இன்று - (06.04.2018) நடந்த முக்கிய நிகழ்வுகள்! உலக வரலாற்றில் இன்று  - (06.04.2018) நடந்த முக்கிய நிகழ்வுகள்! Reviewed by Bright Zoom on April 06, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.