உலக வரலாற்றில் இன்று - (09.04.2018) நடந்த முக்கிய நிகழ்வுகள்!

உலக வரலாற்றில்
இன்று  - (09.04.2018)
நடந்த முக்கிய நிகழ்வுகள்! 


ராகுல் சாங்கிருத்யாயன்:

 இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படுபவரும்இ மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (சுயாரட ளுயமெசவைலயலயn) 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே.

இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய "வால்கா ஸே கங்கா" நூல் வேதகாலத்திற்கு முந்தைய நாட்களிலிருந்து 1944-ம் ஆண்டு வரையிலான காலக் கண்ணாடி. இந்த வரலாற்றுப் புனைவு நூல் மொத்தம் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவர் புத்த துறவியாக மாறிய பிறகு தன் பெயரை ராகுல் சாங்க்ருத்தியாயன் என்று மாற்றிக்கொண்டார். இவர் முறைப்படி கல்வி எதுவும் கற்கவில்லை என்றாலும் சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராக நியமித்தது.

 இவர் சாகித்ய அகாடமி விருதுஇ பத்மபூஷண் விருதுஇ மகாபண்டிட் உள்ளிட்ட பல பட்டங்களையும் பெற்றுள்ளார்.

 மகாபண்டிட் ராகுல்:

 சாங்கிருத்தியாயன் தேசிய விருது சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன. 

 அறிவுக்கடல் தத்துவஞானி மகாபண்டிதர் என்று போற்றப்படும் ராகுல் சாங்க்ருதியாயன் 1963-ம் ஆண்டில் தனது 70வது வயதில் மறைந்தார்.


முக்கிய நிகழ்வுகள்:




1241 – மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.

1413 – ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினார்.

1609 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியாவும் இடச்சுக் குடியரசும் 12 ஆண்டுகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ராபர்ட் ஈ. லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வேர்ஜீனியாவில் யுலிசீஸ் கிராண்ட் இடம் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1937 – கமிக்காசு என்ற வானூர்தி இலண்டன் வந்தது. இதுவே சப்பானில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு வந்த முதலாவது வானூர்தி ஆகும்.

1940 – இரண்டாம் உலகப் போர்: வெசெரியூபங் நடவடிக்கை: டென்மார்க், நோர்வே மீது செருமனி தாக்குதலை ஆரம்பித்தது.

1947 – டெக்சாஸ், ஒக்லகோமா, மற்றும் கன்சாஸ் மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் உயிரிழந்தனர். 970 பேர் காயமடைந்தனர்.

1948 – ஜெருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் இசுரேலியரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1953 – வார்னர் பிறதேர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான “ஹவுஸ் ஒவ் வக்ஸ்” (House of Wax) இனை வெளியிட்டது

1954ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அமெரிக்க அணுசக்தி கழகம் அமைக்கப்பட்டது.

1959 – மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.

1967 – போயிங் 737 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

1969 – முதலாவது பிரித்தானியத் தயாரிப்பான கான்கோர்டு 002 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

1984 – யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.

1984 – இலங்கை இராணுவ வண்டி மீது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.

1991 – ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.

1992 – முன்னாள் பனாமா அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது.

2003 – ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

2005 – இளவரசர் சார்லசு கார்ன்வால் இளவரசி கமில்லாவைத் திருமணம் புரிந்தார்.

2009 – சியார்சியா தலைநகர் திபிலீசியில், 60,000 பேருக்கு மேல் மிக்கைல் சாக்கஷ்விலி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

2013 – ஈரானில் 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர், 850 பேர் காயமடைந்தனர்.

2017 – எகிப்தில் டன்டா, அலெக்சாந்திரியா நகரங்களில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்:

1285 – புயந்து கான், சீன, மங்கோலியப் பேரரசர் (இ. 1320)

1893 – ராகுல சாங்கிருத்யாயன், இந்திய மொழியியலாளர் (இ. 1963)

1917 – பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை, இலங்கைத் தமிழ் ரோமன் கத்தோலிக்க ஆயர் (இ. 2003)

1929 – சரண் ராணி பாக்லீவால், இந்திய இசைக்கலைஞர் (இ. 2008)

1948 – ஜெயபாதுரி, இந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி

இறப்புகள்:

1626 – பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய அரசியல்வாதி, மெய்யியலாளர் (பி. 1561)

1959 – பிராங்க் லாய்டு ரைட், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (பி. 1867)

சிறப்பு நாள்:

டென்மார்க் – செருமானியப் படையெடுப்பு நினைவு நாள்

ஈராக்கிய குர்திஸ்தான்- பாக்தாது விடுதலை நாள் 

Keywords
உலக வரலாற்றில்,
இன்று , (09.04.2018)
நடந்த முக்கிய நிகழ்வுகள்,
ராகுல் சாங்கிருத்யாயன்,
மகாபண்டிட் ராகுல்,
பிறப்புகள்,இறப்புகள்,
சிறப்பு நாள்,
உலக வரலாற்றில் இன்று - (09.04.2018) நடந்த முக்கிய நிகழ்வுகள்! உலக வரலாற்றில் இன்று  - (09.04.2018) நடந்த முக்கிய நிகழ்வுகள்! Reviewed by Bright Zoom on April 09, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.