உலக வரலாற்றில் இன்று(( World History Today 17-04-2018)

உலக வரலாற்றில் இன்று(( World History Today 17-04-2018)
உலக ஹீமோபிலியா தினம்...!


உலக ஹீமோபிலியா தினம் (அ) உலக இரத்த உறையாமை தினம் ஏப்ரல் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

 மரபணுக்களில்(genes) ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபிலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம்(chromosome) பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காயம் ஏற்பட்டால் இரத்தக்கசிவு இருந்துக்கொண்டே இருக்கும். இரத்தம் உறையாது.

இந்நோய்யனது  ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும்.இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

முக்கிய நிகழ்வுகள்:
69 – விட்டேலியஸ் என்பவன்
பெட்ரியாக்கும் என்ற இடத்தில் நடைபெற்ற போரின்
வெற்றிக்குப்பின்னர்,  ரோமப் பேரரசின் மன்னன் ஆனான்.

1492 ஏப்ரல் 17ஆம் தேதி கொலம்பஸ் ஸ்பெயின் அரசிடம் இருந்து வாசனைப் பொருட்களை ஆசியாவிற்க்கு கொள்முதல் செய்யும் உரிமையை  பெற்றர்.

1524 – இத்தாலிய நாடுட்டு கடல் பயணி ஜோவானி டா வெரசானோ ஏப்ரல் 17ஆம் தேதி
நியூயோர்க் துறைமுகத்தை வந்து அடைந்தார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஏப்ரல் 17ஆம் தேதி அன்று அமெரிக்க கூட்டணியில் இருந்த வேர்ஜீனியா விலகியது.

1864 – ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி அமெரிக்க உள்நாட்டுப் போர் கூட்டமைப்புப் படைகள் வட கரோலினாவின் பிளைமவுத் நகரைத் தாக்கினர்.

1895 – சீனாவும் ஜப்பானும் ஏப்ரல் 17ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம்  செய்து கொண்டனர்.

1941 –  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிய படைபலத்தின் தாக்குலுக்கு அஞ்சி யூகொஸ்லாவியப் பேரரசு ஜெர்மனியிடம் சரணடைந்தது.

1961 – அமெரிக்கா  சிஐஏ வின் உளவு நிறுவனத்தில் பயிற்சியளிக்கப்பட்ட கியூபா அகதிகள்  குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவை பதவியில் இருந்து விலக செய்யும் நோக்குடன் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கினார்.

1969 செக்கோசிலவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டூப்செக் ஏப்ரல் 17ஆம் தேதி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1970 – NASA வின் அப்போலோ 13 என்ற விண்கலம் பழுதடைந்ததால் பயணத்தை தொடராமல் பூமித்திரும்பியது.

1971 –வங்காள தேசத்தில் முஜிபுர் ரகுமான் தலைமையில்  மக்கள் குடியரசு உறுவானது.

1975 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நாம் பென்னைக் ஏப்ரல் 17ஆம் தேதி கைப்பற்றினர்.

1986 –   335 ஆண்டுகள் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் நடை
பெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் ஏப்ரல் 17ஆம் தேதி
 கைய்எழுத்தானது


2004 –  இந்தியத் தமிழ் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் நடை பெற்ற விமான விபத்தில் இறந்தார்.

பிறப்புகள் :


1756 -, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை
ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தாரர்
(இறப்பு. 1805)

1894 – , சோவியத் ஒன்றியத்தின் பிரதமர் நிக்கிட்டா குருஷேவ்
ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தாரர்
(இறப்பு. 1971)

1916 – உலகின் முதல் பெண் பிரதமர்ரான இலங்கையின்
சிறிமாவோ பண்டாரநாயக்கா,
ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தாரர்
(இறப்பு. 2000)


1966 – , தமிழ் திரைப்பட நடிகர்
விக்ரம் பிறந்தநாள்

1972 –  இலங்கைப் பந்தாளர்
முத்தையா முரளிதரன் பிறந்தநாள்

1979 – சித்தார்த், பன்மொழி திரைப்பட நடிகர் பிறந்தநாள்

1981 –  இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் 
மயூரன் சுகுமாரன்,
(இ. 2015)

இறப்புகள்

1761 –  ஆங்கிலேயக் கணிதவியலாளர் தொமஸ் பேயிஸ்,மறைவு

1790 – , அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின் மறைவு (பி. 1706)

1942 – ஜீன் பெரின், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் 
மறைவு
(பி. 1870)

1975 –  சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்
தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மறைவு(பி. 1888)

1976 –  மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் ஹென்ரிக் டாம்,மறைவு
(பி. 1895)

1994 –  மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
ரொஜர் ஸ்பெரி மறைவு
(பி. 1913)


2013 –  தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் டி. கே. ராமமூர்த்தி மறைவு
(பி. 1922)

2014 –  மார்க்கேஸ், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளரான கபிரியேல் கார்சியா மறைவு (பி. 1927)

2014:  மலேசிய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆன கர்பால் சிங் மறைவு (பி. 1940)












உலக வரலாற்றில் இன்று(( World History Today 17-04-2018) உலக வரலாற்றில் இன்று(( World History Today 17-04-2018)  Reviewed by Bright Zoom on April 17, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.