உலக வரலாற்றில் இன்று(( World History Today (26.04.2018

உலக வரலாற்றில் இன்று(( World History Today (26.04.2018


 உலக அறிவுசார் சொத்துரிமை தினம்..!

உலக அறிவுசார் சொத்துரிமை தினம் ஏப்ரல் 26ஆம் தேதி 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. மேலும், 1970ஆம் ஆண்டு இதே நாளில் அறிவுசார் சொத்துரிமை அமைப்பு உருவாக்கப்பட்டது.

இத்தினம் மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் கொண்டாடப்படுகிறது.

இராமானுஜன்



இன்று இவரின் 98வது நினைவு தினம்...!!

இந்திய கணிதமேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்தநாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. 

இவருடைய வாழ்வில்( A Synopsis of Elementary Results in Pure and
Applied Mathematics )என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த
ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் பக்கத்து வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார். அப்பாட புத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டார்.



இவர் மனதிலும், கையிலும் இருந்ததெல்லாம்
விந்தைச் சதுரங்கள் (Magic Squares),தொடர் பின்னம் (Continued Fractions),
பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic
Integrals), மிகைப்பெருக்கத் தொடர்
(hypergeometric series) மற்றும்
உயர்தர கணிதப்பொருள்களுமாகும்.


இராமானுஜன் ஆய்வுகளில் 
தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்
(Theory of ecuances)
, தியரி ஆஃப் நம்பர்ஸ்
(Theory of Numbers)
, டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்
(Definite Integrals)
, தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்
(Theory of Partition),
 எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்
(Elliptic Functions and Convention Fragments) எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாக கருதப்படுகின்றன.

1914ம் ஆண்டுக்கும், 1918ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை, பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணிதமேதையாக திகழ்ந்த இவர் 1920ஆம் ஆண்டு மறைந்தார். 

முக்கிய நிகழ்வுகள்

1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி காலத்தால் அழியாமல் நிற்கும் ரோமியோ ஜீலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் லண்டனுக்கு அருகில் பிறந்தார். 

 1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய ,வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான்.

1805 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரோலினாவின் டேர்ஹம் நகரில் கூட்டணியினரிடம் சரணடைந்தனர்.

1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.

1897ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை மறைந்தார்.

1937 – ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஸ்பெயினின் கேர்னிக்கா நகரம் ஜெர்மனியின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.

1945 – இரண்டாம் உலகப் போரரல் நாசி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.

1954 – பிரெஞ்சு இந்தோசீனா, மற்றும் வியட்நாமில்வில் அமைதியைக் கொண்டுவரும் முகாமாக ஜெனீவாவில் அமைதிக்கான பேச்சுக்கள் ஆரம்பமாயின.

1962 – நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதி விபத்துக்குள்ளானது.

1964 – தங்கனீக்கா, சன்சிபார் என்றஇரண்டு நாடுகளும் இணைந்து தான்சானியா எனற நாடுஉருவாகியது.

1981 – இலங்கை இராணுவத்தினரால்
மட்டக்களப்பில் உள்ள பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள்  படுகொலை செய்யப்பட்டனர்.

1982 – தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையை சேர்ந்த ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1986 – உக்ரைன் செர்னோபில் அணுமின் உலையில் ஏற்பட்ட பெரும் விபத்துதான் உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்தாகும்.

1994 –  சீன விமானம் ஒன்று ஜப்பானில் விபத்துக்
குள்ளாகியது இதில் 264 பேர் கொல்லப்பட்டனர்.

1994 – உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஓன்றைத் தாம் கண்டுபிடப்பாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர்.

2005 –சிரியா தனது
 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர்   14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முழுவதும்மாக விலக்கிக் கொண்டது.

பிறப்புகள்

1564 – வில்லியம் சேக்சுபியர், ஆங்கில எழுத்தாளர் (இ. 1616)

1762 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)

1906 – ஜி. பட்டு ஐயர், திரைப்பட நடிகர், இயக்குனர்

1970 – சரண்யா, திரைப்பட நடிகை.

இறப்புகள்

1920 – சிறீனிவாச இராமானுசன், கணித மேதை (பி. 1887)

1897 – பெ. சுந்தரம் பிள்ளை, மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. 1855)

1977 – எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1898)

சிறப்பு நாள்

தான்சானியா – தேசிய நாள்
அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்

ஏப்ரல் 26 கிரிகோரியன் ஆண்டின் 116 ஆம் நாளாகும்.

 நெட்டாண்டுகளில் 117 ஆம் நாள்.

 ஆண்டு முடிவிற்கு மேலும் 249 நாட்கள் உள்ளன.










உலக வரலாற்றில் இன்று(( World History Today (26.04.2018 உலக வரலாற்றில் இன்று(( World History Today (26.04.2018 Reviewed by Bright Zoom on April 26, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.