உலக வரலாற்றில் இன்று(( World History Today - (27.04.18)

உலக வரலாற்றில் இன்று(( World History Today - (27.04.18)



இன்றைய வரலாற்று நிகழ்வுகள்.!
(Today's histor events)


சாமுவெல் மோர்ஸ்
(Samuel Morse)



ஒற்றைக்கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றை கண்டுபிடித்த சாமுவெல் மோர்ஸ் 1791ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். 

இவர் வரலாற்றுக் காட்சிகளை வரையும் ஓவியரும் ஆவார். இவரது மனைவியின் மரணமே, தந்தி முறையைக் கண்டுபிடிக்க காரணமாக இருந்தது. மேலும், மின்சாரம் மூலம் செய்தியை அனுப்ப முடியும் என்பதையும் நிரூபித்தார்.

1844ஆம் ஆண்டு மே 24, உலகின் முதல் தந்திச் செய்தியை வாஷிங்டன்.டிசி-லிருந்து பால்டிமோருக்கு அனுப்பி ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். தந்தி மூலம் மக்களின் சொந்த வாழ்விலும், பொது வாழ்விலும் புதிய மாற்றத்தை கொண்டு வந்த சாமுவெல் மோர்ஸ் 80வது வயதில் (1872) மறைந்தார். 

கந்த முருகேசனார்

உபாத்தியாயர் என்றும் தமிழ்த்தாத்தா என்றும் அழைக்கப்படும் சிறந்த தமிழ் அறிஞர் கந்த முருகேசனார் 1902ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள தென் புலோலியில் பிறந்தார்.

பல பள்ளிக்கூடங்களை திறந்து இங்கு தமிழ் மட்டுமின்றி சமயம், தர்க்கம், புவியியல், கணிதம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன. தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கிய இவரே அனைத்தையும் கற்பித்தார். 

தலைசிறந்த தமிழ்ப் புலவர், உபாத்தியாயர், தமிழ்த்தாத்தா, சீர்திருத்தவாதி, ஞானக்கடல் என்றெல்லாம் போற்றப்பட்ட கந்த முருகேசனார் 63வது வயதில் (1965) மறைந்தார்.

பி.தியாகராயர்

நீதிக்கட்சி நிறுவனர்களில் முக்கியமானவரும், சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கியவருமான பி.தியாகராயர் 1852ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி சென்னை கொருக்குப்பேட்டையில் பிறந்தார்.

1882-ல் சென்னை உள்நாட்டினர் சங்கம் (சென்னை மகாஜன சபை) என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு சார்பில் நீதி என்ற இதழை நடத்தினார். இதன் பெயரைக் கொண்டே இந்த அமைப்பு நீதிக்கட்சி எனக் குறிப்பிடப்பட்டது. 

இவரது தன்னலமற்ற முயற்சியால், 1921-ல் சென்னை மாநில சட்டப்பேரவை தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வர் பதவி இவரைத் தேடி வந்தாலும் அதை மறுத்து வேறு ஒருவரை பொறுப்பேற்கச் செய்தார். 

சென்னையில் உள்ள நகருக்கு இவரது நினைவாக தியாகராய நகர் (தி.நகர்) என்று பெயர் சூட்டப்பட்டது. வெள்ளுடை வேந்தர் எனப் போற்றப்பட்ட சர் பிட்டி தியாகராய செட்டியார் 73வது வயதில் (1925) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்



1124 – முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான்.

1296 – இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னன் டன்பார் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்தரைத் தோற்கடித்தான்.

1521 – நாடுகாண் பயணி பேர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.

1522 – மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்துப் படையினரை ஸ்பானியப் படையினர் தோற்கடித்தனர்.

1565 – பிலிப்பீன்சின் முதலாவது ஸ்பானியக் குடியேற்ற நாடு சேபு (Cebu) அமைக்கப்பட்டது.

1667 – பார்வையற்ற ஜோன் மில்ட்டன் தான் எழுதிய பரடைஸ் லொஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.

1813 – 1812 போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் ஒண்டாரியோவின் தலைநகர் யோர்க்கை கைப்பற்றினர்.

1840 – லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது.

1865 – 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல்டானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கியதில் 1,700 பேர் கொல்லபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கூட்டணிப் படையினராவார்.

1904 – அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்தது.

1909 – துருக்கியின் சுல்த்தான் இரண்டாம் அப்துல் ஹமீட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெஹ்மெட் ஆட்சிக்கு வந்தான்.

1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் கிரேக்கத் தலைநகர் ஏத்தன்ஸ் நகரை அடைந்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: கடைசி நாசி ஜெர்மன் படைகள் பின்லாந்தில் இருந்து வெளியேறினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: நாசிக் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான வோல்கிஷெர் பியோபாக்டர் நிறுத்தப்பட்டது.

1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகருமான பிரபஞ்சன் புதுச்சேரியில் பிறந்தார்.



1959 – மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.

1960 – பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் ஐநாவின் நேரடி ஆட்சியின் கீழிருந்த டோகோ விடுதலை அடைந்தது.



1961 – சியேரா லியோனி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1967 – கனடாவின் மொன்ட்ரியால் நகரில் எக்ஸோ
 67 கண்காட்சி ஆரம்பமானது.

1974 – அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கெதிராக வாஷிங்டன் டிசியில் 10,000ற்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர்.

1978 – இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது.


1981ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி ஜெராக்ஸ் பார்க் கம்பெனி
Xerox PARC முதன்முறையாக கணினி மௌஸை(mouse) அறிமுகப்படுத்தியது.


1992 – சேர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.

1993 – காபோனில் இடம்பெற்ற விமான விபத்தில் காம்பியாவின் தேசிய காற்பந்தாட்ட அணியினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.

1994 – தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.

2001 – தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600-ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.

2002 – நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது.

2007 – எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செம்படையின் நினைவுச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.

பிறப்புகள்

1723 – பிலிப்பு தெ மெல்லோ, கொழும்பில் பிறந்த கிறிஸ்தவத் தமிழ் அறிஞர் (இ. 1790)

1852 – சர் பி. தியாகராய செட்டி, திராவிட அரசியல் தலைவர் (இ. 1925)

1902 – கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (இ. 1965)

1912 – சோரா சேகல், இந்தியத் திரைப்பட நடிகை (இ. 2014)

1942 – வலேரி பொல்யாக்கொவ், ரஷ்ய விண்வெளி வீரர்

1945 – பிரபஞ்சன், தமிழ் எழுத்தாளர், விமர்சகர்

இறப்புகள்

1521 – பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கேய மாலுமி (பி. 1480)

2015 – க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)

சிறப்பு நாள்

சியேரா லியோனி – விடுதலை நாள் (1961)

டோகோ – விடுதலை நாள் (1960)

ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டின் 117 ஆம் நாளாகும்.

 நெட்டாண்டுகளில் 118 ஆம் நாள்.

 ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன.



உலக வரலாற்றில் இன்று(( World History Today - (27.04.18) உலக வரலாற்றில் இன்று(( World History Today - (27.04.18) Reviewed by Bright Zoom on April 27, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.