உலக வரலாற்றில் இன்று ( World History Today - 09-05-2018)
வரலாற்றில் இன்றைய தினம்.!
கோபாலகிருஷ்ண கோகலே
மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலே 1866ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்தார்.
இவர் 1889-ல் இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினரானார். திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். இவர் வன்முறையைத் தவிர்த்து, அரசு நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்.
இவர் 1899-ல் மும்பை சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிக முன்னுரிமைகள் பெற்றுத்தர போராடினார்.
மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுப்படுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தை திருமண வன்கொடுமைகளைத் தடுத்திடும் நோக்கில் ஏற்புடைய சட்டத்தை விரும்பினார். 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். இந்திய சேவகர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியலுக்காகவே பாடுபட்ட கோகலே தனது 48வது வயதில் (1915) மறைந்தார்.
அன்னமாச்சார்யா
இசை உலகில் பல மரபுகளைத் தோற்றுவித்த அன்னமாச்சார்யா 1408ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தாளப்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர்தான் பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்றவைகளை உருவாக்கியவர் என கருதப்படுகிறது. 32,000-க்கும் அதிகமான கீர்த்தனைகளை எழுதியுள்ளார். அதில் 14,000 மட்டுமே கிடைத்துள்ளன. மேலும், பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பும் இவருக்குள்ளது.
இவர் எழுதிய ஓலைச் சுவடிகள் திருப்பதி கோவில் உண்டியலுக்கு எதிரே ஒரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல நூல்களை எழுதியுள்ளார்.
இவரது வாழ்க்கையை வைத்து தயாரிக்கப்பட்ட 'அன்னமய்யா" என்ற தெலுங்கு திரைப்படம் 1997-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
எந்த வேறுபாடுகளும் இல்லாத தெய்வீகத் தொடர்புதான் இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று கூறிய இவர் தனது 94-வது வயதில் (1503) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்.
1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஸ்பெயினில் இருந்து தொடங்கினார்.
1671 – ஐரிஷ் இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான்.
1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி (omnibus) பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1901 – அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்னில் திறந்துவைக்கப்பட்டது.
1914 – துடுப்பாட்டத்தில் 3000 முதற்தர விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையை ஜாக் ஹேர்ண் பெற்றார்.
1919 – இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பாவனை மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.
1920 – போலந்து இராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது.
1927 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.
1933 – மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.
1936 – இத்தாலி அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாடு உருவாகியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை ஜெர்மனிய யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் கடைசி ஜெர்மன் படைகள் சோவியத் தளபதி கியோர்கி சூக்கொவ் இடம் சரணடைந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய இராணுவத் தளபதி ஹேர்மன் கோரிங் அமெரிக்க இராணுவத்தால் கைப்பற்றப்பட்டான்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நோர்வேயின் அதிபராக இருந்த விட்குன் உயிஸ்லிங் நோர்வேயில் கைது செய்யப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் பிராக் நகரை அடைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.
1945 – கிழக்குப் போர்முனை: இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.
1955 – பனிப்போர்: மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்தது.
1956 – உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.
1980 – புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
1985 – காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1987 – போலந்து பயணிகள் விமானம் வார்சாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 183 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
2002 – ரஷ்யாவில் காஸ்பீஸ்க் என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – செச்னியா அதிபர் அகமது காதீரொவ் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2007 மே 09ம் தேதி தினகரன் தமிழ் நாளிதழில் வெளியான சர்வே காரணமாக திராவிட முன்னேற்ற கழகத்தில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1408 – அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1503)
1866 – கோபால கிருஷ்ண கோகலே இந்திய சுதந்திர போராட்ட வீரர், (இ.1915)
1954 – மல்லிகா சாராபாய் இந்திய சமூக ஆர்வலர்.
சிறப்பு நாள்
ரஷ்யா – வெற்றி நாள் (1945)
ஆர்மேனியா – வெற்றி நாள்
ஐரோப்பிய ஒன்றியம் – ஐரோப்பிய நாள்
மே 9 கிரிகோரியன் ஆண்டின் 129 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 130 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன.

Reviewed by Bright Zoom
on
May 10, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
May 10, 2018
Rating:

No comments: