உலக வரலாற்றில் இன்று ( World History Today - 12-05-2018)

உலக வரலாற்றில் இன்று ( World History Today - 12-05-2018)


சர்வதேச செவிலியர் தினம்

சர்வதேச செவிலியர் தினம் மே 12ஆம் தேதி 1965ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இத்தினம் அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செவிலியர்கள், நம் சமூகத்திற்கு ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூற கடைபிடிக்கப்படுகிறது.

 மேலும், செவிலியர்கள் பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகளை உருவாக்கி தந்தவரான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்

 செவிலியர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் 
1820ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார்.

 இவர் 1850-ல் லண்டனில் பணிபுரிந்தபோது ரஷ்யப் பேரரசுக்கும், பிரட்டிஷ் பேரரசுக்கும் இடையே ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார்.

 இரவில் கையில் ஒரு விளக்கை ஏந்தியபடியே எல்லா வார்டுகளையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு நோயாளிகள் அனைவரும் அமைதியாக உறங்குவதை உறுதி செய்த பிறகே இவர் உறங்க செல்வார். அதனால்தான் வரலாறு இவரை விளக்கேந்திய நங்கை  என்று நினைவில் வைத்திருக்கிறது.

இவர் 1883-ல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907-ல் ஆர்டர் ஆஃப் மெரிட்  எனும் விருதையும் பெற்றார். இவர் இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

 இறுதிவரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய இவர் தனது 90வது வயதில் (1910) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்


1656 – ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்.

1689 – பிரான்சுடன் போரிடுவதற்காக இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான்.

1780 – அமெரிக்க புரட்சிப் போர்: தென் கரோலினாவின் சார்ல்ஸ்டன் நகரம் பிரித்தானியப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.

1797 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிஸ் நகரைக் கைப்பற்றினான்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் ஸ்பொட்சில்வேனியா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஆயிரக்கணக்கான கூட்டமைப்பு மற்றும் கூட்டணி படையினர் இறந்தனர்.

1881 – வட ஆபிரிக்காவில் துனீசியா பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.

1895ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சிறந்த தத்துவ ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்தார்.



1922 – 20 தொன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.

1937 – ஆறாம் ஜோர்ஜ் மன்னன் பிரித்தானியாவின் மன்னனாக முடி சூடினான்.

1942 – 1,500 யூதர்கள் போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் வைத்துக் கொல்லப்பட்டனர்.



 1949ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சோவியத் ஒன்றியம், பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.


1952 – காஜ் சிங்க் ஜோத்பூரின் மன்னனாக முடி சூடினான்.

1965 – சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.

1978 – சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

1981 – ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிஸ் ஹியூஸ் சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார்.

1982 – போர்த்துகலில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

பிறப்புகள்

1820 – புளோரன்ஸ் நைட்டிங்கேல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி (இ. 1910)

1843 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பிரித்தானியாவைச் சேர்ந்த பாளி அறிஞர் (இ. 1922)

1895 – ஜே. கிருஷ்ணமூர்த்தி, இந்தியத் தத்துவ அறிஞர் (இ. 1986)

1912 – மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (இ: 1979)

1926 – எம். எஸ். எஸ். பாக்கியம், திரைப்பட நடிகை

1952 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய அரசியல்வாதி. (இ. 2000)

இறப்புகள்

2001 – அலெக்சி தூபோலெவ், ரஷ்ய விமான வடிவமைப்பாளர் (பி. 1925)

சிறப்பு நாள்

உலக செவிலியர் நாள்

மே 12  கிரிகோரியன் ஆண்டின் 132 ஆம் நாளாகும்.

 நெட்டாண்டுகளில் 133 ஆம் நாள்.

 ஆண்டு முடிவிற்கு மேலும் 233 நாட்கள் உள்ளன.






உலக வரலாற்றில் இன்று ( World History Today - 12-05-2018) உலக வரலாற்றில் இன்று ( World History Today - 12-05-2018) Reviewed by Bright Zoom on May 18, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.