உலக வரலாற்றில் இன்று ( World History Today - 13-05-2018)

உலக வரலாற்றில் இன்று ( World History Today - 13-05-2018)



இன்று உலக அன்னையர் தினம்:

அன்னையர் தின வாழ்த்துக்கள்.....!!

தாய்மையை போற்றும் விதமாக இன்று மே 13ஆம் தேதி உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த அன்னா மேரி ஜர்விஸ் தன்னுடைய அன்னைமீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது. 1914-ல் இவரின் கடும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் அவர்கள் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை (மே 13) அன்னையர் தினமாக அறிவித்தார்.

தாயின் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார வாய்ப்பு போன்ற சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். தாயின் மனதிற்கேற்ப நடந்து, தாயை மகிழ்விக்க கிடைத்த ஓர் அரிய நாளாக எண்ணிக் கொண்டாடுவோம்.

உலக வலசை போதல் தினம்



பறவைகளின் இடப்பெயர்வையே வலசை போதல் என்கிறார்கள். பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன.

அவ்வாறு செல்லும் பறவைகளைப் பாதுகாத்தல், அதன் இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006ஆம் ஆண்டிலிருந்து மே இரண்டாவது வாரம் இறுதியில் (மே 12 மற்றும் 13) கடைபிடிக்கப்படுகிறது.

பக்ருதின் அலி அகமது

இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவரான பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.

1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இரண்டு முறை அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடுவண் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை, கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை மற்றும் நிறுவன சட்டங்கள் போன்ற துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். 1967-ல் அகில இந்திய மட்டைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முக்கிய நிகழ்வுகள்


1619 – டச்சு அரசியல்வாதி ஜொகான் வன் ஓல்டென்பார்னவெல்ட் ஹேக் நகரில் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.

1648 – டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டான்.

1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டார்.

1830 – எக்குவாடோர் விடுதலை அடைந்தது.
1846 – ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.

1861 – பெரும் வால்வெள்ளி ஒன்று ஆஸ்திரேலியாவில் அவதானிக்கப்பட்டது.

1880 – நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.

1888 – பிரேசில் அடிமைமுறையை இல்லாதொழித்தது.

1913 – நான்கு இயந்திரங்களினால் ஆன முதலாவது விமானத்தை ஈகர் சிபோர்ஸ்கி என்ற ரஷ்யர் இயக்கினார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாசி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்ஹெல்மேனியா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: வட ஆபிரிக்காவில் ஜெர்மனிய மற்றும் இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.

1952 – இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.

1954 – சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.

1960 – உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.

1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.

1969 – மலேசியாவில் கோலாலம்பூரில் சீனர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.


1974-ல் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்று, இறக்கும் வரை பதவியில் இருந்த பக்ருதின் அலி அகமது தனது 71வது வயதில் (1977) மறைந்தார்.

1981 – ரோமில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1996 – வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.

1997 – இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

1998 – இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.

1998 – இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஜப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.

2000ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி தமிழ் கவிஞர் தாராபாரதி மறைந்தார்.

2001ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி இந்திய நாவலாசிரியர் ஆர்.கே.நாராயணன் மறைந்தார்.

2005 – உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவற்துறையினர் போராட்டக் காரர் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – அல்லைப்பிட்டி படுகொலைகள், 2006: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.

2006 – திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.

2007 – திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணகத்துக்குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.

பிறப்புக்கள்

1882 – ஜோர்ஜெஸ் பிராக், பிரெஞ்சு ஓவியர் (இ. 1963)

1905 – பக்ருதின் அலி அகமது, இந்தியக் குடியரசுத் தலைவர், (இ. 1977)

1918 – பாலசரஸ்வதி, பரத நாட்டிய மேதை (இ. 1984)

1956 – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய குரு

1978 – மைக் பிபி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1898 – பி. ஆர். ராஜமய்யர், தமிழ் எழுத்தாளர் (பி. 1872)

1978 – வி. தெட்சணாமூர்த்தி, தவில் மேதை (பி. 1933)

2000 – தாராபாரதி தமிழ்க்கவிஞர் (பி.1947)

2001 – ஆர். கே. நாராயண், இந்திய நாவலாசிரியர் (பி. 1906)

சிறப்பு நாள்.

மே 13 கிரிகோரியன் ஆண்டின் 133 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 134 ஆம் நாள்.

ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன.

உலக வரலாற்றில் இன்று ( World History Today - 13-05-2018) உலக வரலாற்றில் இன்று ( World History Today - 13-05-2018) Reviewed by Bright Zoom on May 19, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.