உலக வரலாற்றில் இன்று ( World History Today - 15-05-2018)
இன்றைய வரலாறு !!
சர்வதேச குடும்ப தினம்
ஐக்கிய நாடுகள் சபையால் 1992ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் மே 15ஆம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை சர்வதேச குடும்ப தினம் வலியுறுத்துகிறது.
பியரி கியூரி

மனிதகுல மேம்பாட்டிற்கான பல சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்த பியரி கியூரி 1859ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி பாரிஸில் பிறந்தார். இவர் 21வது வயதில் தன் சகோதரருடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பீசோ மின் குவார்ட்ஸ் மின்னோட்டமானியை (Pநைணழ நுடநஉவசiஉ நுககநஉவ) கண்டறிந்தார்.
இவர் காந்த குணங்களைக் கண்டறிவதற்காக முறுக்குத் தராசு (வுழசளழைn டீயடயnஉந) ஒன்றை உருவாக்கினார். பிறகு காந்தப் பொருட்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவர் கண்டறிந்த விதிமுறையை கியூரி விதி எனப்படுகிறது.
தன் மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். இவர்கள்தான் கதிரியக்கம் (சுயனழையஉவiஎவைல) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினார்கள்.
கதிரியக்கத்தை கண்டறிந்தமைக்காக 1903-ல் ஹென்றி பெக்கெரல், மேரி கியூரியுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை கண்டறிந்தார். கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி அலகு என்று குறிப்பிடப்பட்டது.
நோபல் பரிசு குடும்பத்தில் பிறந்த கதிரியக்கக் கண்டுபிடிப்பின் முன்னோடியான பியரி கியூரி தனது 46வது வயதில் (1906) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1525 – ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.
1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.
1718ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.
1756 – இங்கிலாந்து பிரான்சின் மீது போரை அறிவித்ததில் ஏழாண்டுப் போர் ஆரம்பமாயிற்று.
1792 – பிரான்ஸ் சார்டீனியப் பேரரசு மீது போரை அறிவித்தது.
1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.
1851 – நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
1860 – கரிபால்டியின் படைகள் சிசிலியின் நேப்பில்ஸ் நகரைக் கைப்பற்றினர்.
1897 – கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.
1907ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி இந்திய விடுதலைக்காக வீரமரணம் அடைந்து, இன்றும் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழும் சுகதேவ், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தார்.
1915 – இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
1918 – பின்லாந்து உள்நாட்டுப் போர் முடிவுற்றது.
1919 – துருக்கியின் இஸ்மீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.
1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1932 – ஜப்பானியப் படையினர் ஷங்காயை விட்டுப் புறப்பட்டனர்.
1932 – ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார்.
1935 – மொஸ்கோவில் சுரங்க தொடருந்து சேவை ஆரம்பமானது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பெரும் போருக்குப் பின்னார் டச்சுப் படைகள் நாசி ஜெர்மன் படைகளிடம் சரணடைந்தனர்.
1940 – மக்டொனால்ட்ஸ் தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் ஆரம்பித்தது.
1948 – இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவுதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.
1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.
1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.
1972 – 1945 முதலை ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஓக்கினாவா தீவு மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
1978 – டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது
1985 – குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
1988 – எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர்.
1991 – ஈடித் கிரெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.
2005 – திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.
2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறப்புக்கள்
1859 – பியேர் கியூரி, பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1906)
1912 – இராமசுவாமி ஐயர் (புளிமூட்டை), நகைச்சுவை நடிகர்.
1916 – கம்பதாசன் கவிஞர், எழுத்தாளர், தமிழ்திரைப்பட பாடலாசிரியர். (1973)
1928 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)
1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி.
இறப்புகள்
1978 – ரொபேர்ட் மென்சீஸ், ஆஸ்திரேலியாவின் 12வது பிரதமர் (பி. 1894)
சிறப்பு நாள்
சர்வதேச குடும்ப தினம்
பராகுவே – விடுதலை நாள் (1811)
மெக்சிகோ – ஆசிரியர் நாள் (Día del Maestro)
தென் கொரியா – ஆசிரியர் நாள்
மே 15 கிரிகோரியன் ஆண்டின் 135 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 136 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன.

Reviewed by Bright Zoom
on
May 19, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
May 19, 2018
Rating:

No comments: