உலக வரலாற்றில் இன்று ( World History Today - 19-05-2018)

உலக வரலாற்றில் இன்று ( World History Today - 19-05-2018)


இன்றைய வரலாற்று நிகழ்வுகள்.! 

வரலாற்றில் இன்று !!

உலக குடும்ப மருத்துவர் தினம் 


ஒவ்வொரு ஆண்டும் மே 19ஆம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்கு குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும், சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப மருத்துவர் அமைப்பு -WONCA) 2010ல் முதன்முதலாக இந்நாளை அறிவித்தது.

குடும்ப மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான மருத்துவராக நீண்ட காலமாக இருப்பதால், அவர்கள் நோய்வாய்ப்படும் போதும் அவர்களால் முடியாத பட்சத்திலும் வீட்டிற்கே வந்து மருத்துவம் பார்ப்பார். எனவே, குடும்ப மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பாராட்டும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நீலம் சஞ்சீவ ரெட்டி



இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவரான நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்கள், 1913ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் என்ற மாவட்டத்திலுள்ள இல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

1929ல் அனந்தபூருக்கு வந்த மகாத்மா காந்தியின் வருகை இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவருடைய கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டார். 

இவர் ஆந்திரப் பிரதேச மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராக நியமிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். சென்னை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர், செயலாளர், இந்திய சட்டமன்ற உறுப்பினர் என பல பதவிகளை வகித்த இவர், 1951ல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். பிறகு, ராஜ்ய சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 முதல் 1960 வரை சிறப்பாக பணியாற்றினார். பிறகு 1962ல் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய பணியை தொடர்ந்தார்.

தன்னுடைய திறமையான மற்றும் நேர்மையான பணியாற்றலால் 1977ஆம் ஆண்டு இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவராக (1977-1982) தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய இளம் வயதிலேயே தீவிர சுதந்திரப் பற்றுக்கொண்ட இவர் தன்னுடைய 83வது வயதில் (1996) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்


1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.

1536 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி “ஆன் பொலெயின்” வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1604 – கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்டது.

1649 – இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.

1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.

1897 – ஐரிய எழுத்தாளர் ஆஸ்கார் வைல்டு இங்கிலாந்தின் ரெடிங் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.

1961 – சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வேறொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்ணூர்தி ஆனது.

1971 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.

1978 – விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரரும், பி.எஸ். என்று மக்களால் அழைக்கப்பட்ட பி.சுந்தரய்யா மறைந்தார். 

1904ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இந்தியத் தொழில் துறையின் தந்தை என்று அறியப்படும் ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா மறைந்தார். 

1991 – அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் குரொவேசியர்கள் தமது விடுதலைக்காக வாக்களித்தனர்.

1996ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வரான ஜானகி இராமச்சந்திரன் மறைந்தார். 


பிறப்புக்கள்

1762 – யோஃகான் ஃபிக்டே, ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1814)

1882 – மொஹம்மது மொஸாடெக், ஈரானியத் தேசிய இயக்கத்தின் தலைவர்

1890 – ஹோ ஷி மின், வியட்நாமியத் தலைவர் (இ. 1969)

1925 – பொல் பொட், கம்போடிய சர்வாதிகாரி (இ. 1998)

1925 – மால்கம் எக்ஸ், அமெரிக்க மனித உரிமைச்செயற்பாட்டாளர் (இ. 1965)

1976 – கெவின் கார்னெட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1904 – ஜாம்செட்ஜி டாடா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (பி. 1839)

1985 – பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சியக் கட்சித் தலைவர் (பி. 1913)

1996 – ஜானகி இராமச்சந்திரன் திரைப்பட நடிகை, தமிழக அரசியல்வாதி இ.1924

2007 – ஜோதி, தமிழ்த் திரைப்பட நடிகை

சிறப்பு நாள்

உக்ரேன் – அறிவியல் நாள்

மே 19  கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும்.

 நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள்.

 ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.





உலக வரலாற்றில் இன்று ( World History Today - 19-05-2018) உலக வரலாற்றில் இன்று ( World History Today - 19-05-2018) Reviewed by Bright Zoom on May 19, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.