உலக வரலாற்றில் இன்று ( World History Today - 03-06-2018)

உலக வரலாற்றில் இன்று
 ( World History Today - 03-06-2018)



வரலாற்றில் இன்று.! (03.06.18)

 கலைஞர் மு.கருணாநிதி...!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான டாக்டர் மு.கருணாநிதி 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

இவர் சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதை தவிர, பல்வேறு கவிதைகள், புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார்.




 'தூக்குமேடை" நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா, இவருக்கு 'கலைஞர்" என்ற பட்டம் அளித்தார். பின்பு, அதுவே நிலைத்து விட்டது. இவர் திரைக்கதை எழுதிய பராசக்தி, மனோகரா, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி போன்ற படங்கள் மிகவும் பிரபலம் பெற்றவை.

இவர் தன்னுடைய 14வது வயதில் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபட்டார். தமிழகத்தின் முதல்வராக இவர் ஐந்துமுறை பதவி வகித்துள்ளார். 

 தமிழக அரசியலில் தொடர்ந்து பங்காற்றி வரும் முக்கியமான மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான இவர் இன்று 95வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 

முக்கிய நிகழ்வுகள்...!!





1539 – ஸ்பானிய நாடுகாண் பயணி ஹெர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை ஸ்பெயினுக்காக உரிமை கொண்டாடினான்.

1657ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்து கூறிய இங்கிலாந்து மருத்துவர் வில்லியம் ஹார்வி மறைந்தார்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வேர்ஜீனியாவின் ஹனோவர் நகரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளைத் தாக்கினர்.


1889ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதன்முதலில் மின்சாரம் அதிக தூரம் (அமெரிக்காவின் வில்லாமிட்டி அருவியில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் உள்ள ஓரகன் என்னுமிடத்தில் போர்ட்லாண்ட் பகுதிக்கு) எடுத்துச் செல்லப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் நகரில் இடம்பெற்ற போடரில் ஜெர்மன் படைகள் வெற்றி பெற்றன. நட்பு அணி நாடுகள் முழுமையாகப் பின்வாங்கின.

1962 – பிரான்சின் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.

1969 – தெற்கு வியட்நாமில் ”மெல்பேர்ன்” என்ற அவுஸ்திரேலியப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.

1984 – அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.

1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.

1991 – ஜப்பானில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார்.

1998 – ஜெர்மனியில் கடுகதி தொடருந்து ஒன்று பாதையை விட்டு விலகியதில் 101 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.

2006 – மொண்டெனேகுரோ நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.

2007 – கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2007 – தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.

பிறப்புகள்

1808 – ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889)

  1924 – மு. கருணாநிதி, தமிழ் நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்

1931 – ராவுல் காஸ்ட்ரோ, கியூபாவின் அரசுத் தலைவர்

1961 – லோறன்ஸ் லெஸிக், அமெரிக்கக் கல்வியலாளர்

1966 – வசீம் அக்ரம், பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர்

இறப்புகள்

1657 – வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய மருத்துவர் (பி. 1578)

1924 – பிரான்ஸ் காஃப்கா, செக் எழுத்தாளர் (பி. 1883)

1963 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) (பி. 1881)

1963 – நாசிம் ஹிக்மட், கிரேக்க-துருக்கி எழுத்தாளர் (பி. 1902)

1989 – ரூஃகூல்லா மூசவி கொமெய்னி, இரானிய ஆன்மிகத் தலைவர், அரசியல்வாதி (பி. 1902)

1990 – ராபர்ட் நாய்சு, அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1927)

2000 – ஜெய்சங்கர், திரைப்பட நடிகர்

2013 – ஜியா கான், அமெரிக்க-இந்திய நடிகை (பி. 1988)

2014 – கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1949)

சிறப்பு நாள்...!!

சூன் 3  கிரிகோரியன் ஆண்டின் 154 ஆம் நாளாகும்.

 நெட்டாண்டுகளில் 155 ஆம் நாள்.

 ஆண்டு முடிவிற்கு மேலும் 211 நாட்கள் உள்ளன.

சிந்தனை துளிகள்...!! 

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்து கொள்வதாகப் பொருள். 

நீங்கள் ஒரு வாய்ப்பை தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!


words:

உலக வரலாற்றில் இன்று

( World History Today - 03-06-2018)

வரலாற்றில் இன்றைய தினம்...!!

வரலாற்றில் இன்று...!!

ஜூன் - 03

கலைஞர் மு.கருணாநிதி...!!


முக்கிய நிகழ்வுகள்...!!

பிறப்புகள்...!!

இறப்புகள்...!!

சிறப்பு நாள்...!!

சிந்தனை துளிகள்..!!





உலக வரலாற்றில் இன்று ( World History Today - 03-06-2018) உலக வரலாற்றில் இன்று  ( World History Today - 03-06-2018) Reviewed by Bright Zoom on June 04, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.