உலக வரலாற்றில் இன்று ( World History Today - 02-06-2018)
வரலாற்றில் இன்றைய தினம் !
ஜூன் - 02
இளையராஜா...!!
திரையுலகின் முடிசூடா மன்னன் 'இசைஞானி" இளையராஜா 1943ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராசய்யா.
இவர் 26வது வயதில் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தார். பிறகு 'அன்னக்கிளி" திரைப்படம் மூலம் 1976-ல் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இவருக்கு 'இளையராஜா" என்ற பெயரை படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் தான் சூட்டினார். இதை தொடர்ந்து 'பதினாறு வயதினிலே", 'பொண்ணு ஊருக்குப் புதுசு" ஆகிய படங்களில் இவரது இசை, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
லண்டனில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவில்) சிம்பொனிக்கு இசையமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
பத்மபூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றுள்ளார்.
இசை ராஜாங்கத்தின் இசைஞானி இன்று 75வது வயதில் வெற்றியுடன் அடியெடுத்து வைக்கிறார்.
முக்கிய நிகழ்வுகள்...!!
1615 – பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர்.
1882ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி நவீன இத்தாலியை உருவாக்கிய கரிபால்டி மறைந்தார்.
1896ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1924 – ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்து பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அதிபர் கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார்.
1946 – இத்தாலியில் முடியாட்சியை குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மன்னன் நாட்டை விட்டு வெளியேறினான்.
1953 – இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
1956ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி திரைப்படத்துறையில் ஒரு மாமேதையாக போற்றப்படும் மணிரத்னம் மதுரையில் பிறந்தார்.
1965 – வியட்நாம் போர்: முதலாவது தொகுதி அவுஸ்திரேலியத் துருப்புகள் தெற்கு வியட்நாமை அடைந்தது.
1966 – நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
1992 – டென்மார்க் மக்கள் மாஸ்ட்ரிக்ட் உடன்பாட்டுக்கு எதிர்த்து வாக்களித்தனர்.
1999 – பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
2003 – வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் இருந்து ஏவியது.
பிறப்புகள்...!!
1942 – டென்மார்க் சண், ஈழத்து திரைப்பட இசையமைப்பாளர்.
1943 – இளையராஜா, இந்திய இசையமைப்பாளர்.
1956 – மணிரத்னம், தமிழ் இயக்குனர்.
1965 – ஸ்டீவ் வா மற்றும் மார்க் வா, ஆஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர்கள்.
இறப்புகள்...!!
1842 – பி. கந்தப்பிள்ளை, (ஆராய்ச்சிக் கந்தர்), யாழ்ப்பாணப் புலவர், வைத்தியர், நாவலரின் தந்தை.
1882 – கரிபால்டி, நவீன இத்தாலியை உருவாக்கியவர். (பி. 1807)
1981 – தாவீது அடிகள், யாழ்ப்பாணத் தமிழறிஞர் (பி. 1907)
2014 – துரைசாமி சைமன் லூர்துசாமி, கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் (பி. 1924)
2015 – சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (பி. 1941)
சிறப்பு நாள்...!!
சூன் 2 கிரிகோரியன் ஆண்டின் 153 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 154 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 212 நாட்கள் உள்ளன.
சிந்தனை துளிகள்..!!
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
Keywords:
உலக வரலாற்றில் இன்று
( World History Today - 02-06-2018)
வரலாற்றில் இன்றைய தினம்...!!
வரலாற்றில் இன்று...!!

Reviewed by Bright Zoom
on
June 04, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
June 04, 2018
Rating:

No comments: