உலக வரலாற்றில் இன்று ( World History Today - 22-05-2018)

உலக வரலாற்றில் இன்று ( World History Today - 22-05-2018)

இன்று இந்திய மறுமலர்ச்சியின் தந்தை பிறந்த தினம்.! 

வரலாற்றில் இன்று !!

உலக பல்லுயிர் பெருக்க தினம்


உலக பல்லுயிர் பெருக்க தினம் என்பது இயற்கைக்கும், மனித வாழ்விற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இத்தினம் மே 22ல் கொண்டாடப்படுகிறது.

மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது மனிதனின் கடமையாகும். உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

உலக கோத் தினம்



உலக கோத் தினம் என்பது பிரிட்டனில் 2009ஆம் ஆண்டு பிபிசி ரேடியோ 6 என்ற எண்ணில் உருவானது. கோத் பிஜேக்கன் மற்றும் மார்டின் ஒல்டு கோத் ஒரு நிகழ்ச்சியை இயக்கினார்கள்.

பின்பு, ஒவ்வொரு வருடமும் மே 22ஆம் தேதி இந்த நிகழ்வை நடத்த முடிவு செய்தனர். இசை, பேசன் ஷோக்கள், கலை, கண்காட்சி என இந்நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

ராஜா ராம் மோகன் ராய்



இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்திய ராஜா ராம் மோகன் ராய் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி வங்காளத்தில் பிறந்தார்.

இவர் சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக செயல்பட்டார். இதன்மூலம், அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார்.

இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவினார். குழந்தைத்திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்களுக்கு முழு உரிமை என பல போராட்டங்களை நடத்தினார். சதி என்னும் உடன்கட்டை ஏறும் சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்.

தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ராஜா ராம் மோகன் ராய் தனது 61வது வயதில் (1833) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்:

கிமு 334 – மகா அலெக்சாண்டர் தலைமையில் கிரேக்க இராணுவம் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனைத் தோற்கடித்தனர்.

1809 – வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.

1834 – இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.

1840 – நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானியக் குற்றவாளிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.

1844 – பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.

1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.

1915 – ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.

1915 – ஸ்கொட்லாந்தில் ஐந்து தொடருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டனர். 246 பேர் காயமடைந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: மெக்சிக்கோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.

1958- இலங்கை இனக்கலவரம் – இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.

1967 – பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

1968 – அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் கொல்லப்பட்டனர்.

1972 – இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து குடியரசு ஆகியது. . சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.

1990 – வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.

1990 – விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.

2004 – நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.

பிறப்புகள்

1859 – சேர் ஆர்தர் கொனன் டொயில், துப்பறியும் எழுத்தாளர் (இ. 1930)

1867 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1946)

1944 – வை.கோபாலசாமி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தலைவர்.

1926 – தமிழ்வாணன் தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ.1977)

இறப்புகள்

1885 – விக்டர் ஹியூகோ, பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1802)

சிறப்பு நாள்

சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்
யேமன் – தேசிய நாள்
இலங்கை – தேசிய வீரர்கள் நாள், குடியரசு நாள் (1972

மே 22 கிரிகோரியன் ஆண்டின் 142 ஆம் நாளாகும்.

 நெட்டாண்டுகளில் 143 ஆம் நாள்.

 ஆண்டு முடிவிற்கு மேலும் 223 நாட்கள் உள்ளன.

இன்றைய சிந்தனை துளிகள் !!

உனக்கு நீ நல்லவனாய் இருந்தால்போதும், மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் அது உன் குற்றம் இல்லை. கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே. அது பார்க்கப்படுபவன் பிழையல்ல, பார்ப்பவன் பிழை.

எல்லோருடைய இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம்தான் வித்தியாசம். சிலர் கண்ணீராக, சிலர் புன்னகையாக. 

உலக வரலாற்றில் இன்று ( World History Today - 22-05-2018) உலக வரலாற்றில் இன்று ( World History Today - 22-05-2018) Reviewed by Bright Zoom on June 01, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.