நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டிய மலைப்பிரதேசங்கள்

1/8
உலகில் அசரவைக்கும் பல இடங்கள் உள்ளன, அந்த அசரவைக்கும் இடங்களை சாகசக் களங்களாகப் பார்ப்பவர்களும் பலர் உள்ளனர். அதற்காக மலை உச்சிகளில் இருந்து குதிப்பது, ஸ்கை டைவிங் போன்ற சாகசங்களைச் செய்வார்கள். ஆனால், ஒரு சில மலை உச்சிகளில் நிற்பதே சாகசம்தான். அந்த உச்சியில் நின்று இந்த அழகான உலகத்தை ரசிப்பதைக் காட்டிலும் பெரிய சாகசம் எதுவும் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சில இடங்களை இங்குப் பார்ப்போம்.
2/8
கேச டெல் எல்போர், பனோஸ், ஈக்குவடார்
இந்த கேச டெல் எல்போர் மலை உச்சியில் இருக்கும் மரவீட்டிலிருந்து அழகான இயற்கை காட்சிகளை ரசிப்பது என்பது அற்புதமான விஷயம். அதைவிட அற்புதமானது, அங்கு இருக்கும் ஊஞ்சலில் ஆடுவதுதான். மற்ற ஊஞ்சல்களை போல் இல்லாமல் மலையில் உச்சியில் கட்டப்பட்டுள்ளது இந்த ஊஞ்சல், இதில் ஊஞ்சலாடுவதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதாது தைரியமும் வேண்டும்.

3/8
ப்ரிகிஸ்டோலன். நார்வே
1982 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலை உச்சியில் வருடந்தோறும் சாகசப் பயணம் மேற்கொள்பவர்கள் வருகைப்புரிவார்கள். இந்த இடத்தில் பாதுகாப்பிற்காக வேலி போன்ற எதுவும் இருக்காது. இந்த இடத்திலிருந்து இயற்கை அழகை ரசிப்பது என்பது அனைத்து சாகசக்காரர்களுக்கும் கனவாகும்.

4/8
பீச்சி ஹெட், கிழக்கு சசெக்ஸ், இங்கிலாந்து
இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய மலை உச்சி களில் ஒன்றான இந்த பீச்சி ஹெட்டிற்கு தினமும் பலர் வருகை தருகின்றனர். கடலின் அருகே இருக்கும் இந்த மலை உச்சி சாகசக்காரர்களுக்காக விருந்தாக அமைந்து வருகிறது. சுமார் 531 அடி உயரத்தில் இருக்கும் இந்த உச்சியிலிருந்து கடலின் அழகை ரசிக்க யாருக்குதான் ஆசை இருக்காது.

5/8
ஹம் ஹாட் கிளிப், சாய் தாங் நேஷனல் பார்க், தாய்லாந்து
தாய்லாந்தில் இருக்கும் இந்த மலை உச்சிக்கு பயந்த சுபாவம் உடையவர் போக மாட்டார்கள். இந்த உச்சிக்குச் சென்றால் மனஅமைதி கண்டிப்பாக கிடைக்கும். அந்த அளவிற்கு, அழகும் அமைதியும் ஒன்றாக இருக்கும் இடம். மேலும், இந்த இடத்தில் அரிய பூக்களின் வகைகளும் இருப்பதால், சாகசக்காரர்கள் மட்டுமில்லாமல் இயற்கை ஆர்வலர்களுக்கும் இது விருந்தாக அமைகிறது.

6/8
ட்ரோல்டங்கா, நார்வே
நார்வேயில் உள்ள இந்த மலை உச்சி அனைவரும் சென்று பார்வையிடக்கூடிய சுற்றுலாத்தலம் கிடையாது. இது சாகசகாரர்களுக்காகவே இயற்கை அளித்த பரிசு. இந்த உச்சியில் பாதுகாப்பு வேலிகள் எதுவும் கிடையாது.

7/8
மவுண்ட்ரோரைமா, தென் அமெரிக்கா
தென் அமெரிக்காவில் இருக்கும் இந்த மலைஉச்சியின் மலைத்தொடர் வெனிசுலா, கயானா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்கும் விரிந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 9219 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலை உச்சியில் நிற்பது, உலகத்தின் உச்சத்தில் இருக்கும் அனுபவத்தை அளிக்கும் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. இந்த இடத்திற்கு நீங்கள் விமானம் மூலமும் செல்லலாம்.

8/8
தி ஐகுல்லி டு மிடி, தி மான்ட் பிளான்க் ரேஞ்ச், பிரான்ஸ்
பிரான்சின் மிக முக்கிய சுற்றலா தலமாக தி ஐகுல்லி டு மிடி திகழ்கிறது. இதை பார்க்க தினமும் பலபேர் இங்கு வருகின்றனர். இந்தப் பகுதியை ரசிப்பதற்காக வேலி அமைத்து கண்ணாடி தடுப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 12604 அடி உயரத்தில் இருக்கும் இந்த உச்சியை குளிர் காலத்தின்போது பார்வையிடுவது சிறந்தது. இந்த உச்சியிலிருந்து பனிமலைகளின் அழகை ரசிக்க யாருக்குதான் ஆசை இருக்காது.
பிரான்சின் மிக முக்கிய சுற்றலா தலமாக தி ஐகுல்லி டு மிடி திகழ்கிறது. இதை பார்க்க தினமும் பலபேர் இங்கு வருகின்றனர். இந்தப் பகுதியை ரசிப்பதற்காக வேலி அமைத்து கண்ணாடி தடுப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 12604 அடி உயரத்தில் இருக்கும் இந்த உச்சியை குளிர் காலத்தின்போது பார்வையிடுவது சிறந்தது. இந்த உச்சியிலிருந்து பனிமலைகளின் அழகை ரசிக்க யாருக்குதான் ஆசை இருக்காது.
நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டிய மலைப்பிரதேசங்கள்
Reviewed by Bright Zoom
on
August 28, 2018
Rating: 5

No comments: