கொலம்பஸ் பற்றி உலகமே இன்று வரை ஏமார்ந்து கொண்டிருக்கும் உண்மைகள்!

கொலம்பஸ் பற்றி உலகமே இன்று வரை ஏமார்ந்து கொண்டிருக்கும் உண்மைகள்!

pic

கொலம்பஸ் தான் புதிய உலகை கண்ட முதல் ஐரோப்பியர் என பலரும் பெருமையாக கருதுகிறார்கள். ஆனால், இவர் கண்டுபிடிக்கும் முன்னரே, 500 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவை வேறொரு ஐரோப்பிய கடற் பயணி கண்டுபிடித்துவிட்டார்

pic

உண்மை பெயர்!
அனைவராலும் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என அறியப்படும் இவரது உண்மை பெயர் க்றிஸ்டோபோரோ கொலம்போ.

pic

அழிவுகள்!
கொலம்பஸ் மேற்கொண்ட பல பயணங்கள் அழிவில் தான் முடிந்துள்ளன. ஒருமுறை ஸ்பெயினில் இருந்து இவர் பல விலைமதிப்பற்ற பொருட்களோடு புதிய பாதையில் துவக்கிய பயணம் ஒரு விபத்தால் வெறும் கையோடு நாடும் திரும்பும் நிலையை உண்டாக்கியது.

pic

கேவலமான கவர்னர்!
ஸ்பெயின் அரசரும், அரசியும் கொலம்பஸ்-ஐ சாண்டோ - டோமிங்கோ என்ற பகுதிக்கு இவரை கவர்னராக நியமித்தனர். அப்போது, இவரும், இவரது சகோதரரும் பெரும் லாபங்களை தாங்கள் எடுத்துக் கொண்டு ஏமாற்றி வந்தனர். இதனால் இவரது நியமனத்தை நிராகரித்து புதிய கவர்னரை நியமித்தார் ஸ்பெயின் அரசர்.

pic

மதச்சார்புடைய நபர்
கொலம்பஸ் மதச்சார்புடைய நபராக தான் திகழ்ந்தார். இவரது பயணங்களில் கண்டுபிடித்த இடங்களுக்கு மதம் சார்ந்த பெயர்களையே சூட்டினார்.

pic

அமெரிக்காவை கண்டுபிடித்தார்...
கொலம்பஸ் என்றாலே அமெரிக்காவை கண்டுபிடித்தார் என சிலர் குறியிட்டு கூறுவர். ஆனால், அவர் வட அமெரிக்காவில் கால் பதிக்கவே இல்லை. இந்தியா என கருதி அவர் கால் பதித்த இடம் கரீபியனை சேர்ந்த பஹமாஸ் தீவு ஆகும்.

pic

புதிய உலகம்!
1492ல் இவர் மேற்கொண்ட கப்பல் பயணம் தான், புதிய உலகம். இந்த பயணத்தின் போது இவர் நான்கு இடங்களை கண்டுபிடித்தார்.
முதலில் இவர் கரீபியன் தீவையும், அதற்கடுத்து தென் அமெரிக்காவையும், பிறகு சென்ட்ரல் அமெரிக்காவையும் கண்டுபிடித்தார்.

pic

முதல் நபரா?
புதிய உலகில் கால் பதித்த முதன் ஐரோப்பியர் கொலம்பஸ் என பலரும் கருதுகிறார்கள். ஆனால், அதற்கு வெகு காலம் முன்னரே, லெய்ப் எரிக்ஸன் அமெரிக்காவை அடைந்துவிட்டார் என சில கடல் பயண ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஏறத்தாழ 1000 கி.பி-யிலேயே எரிக்ஸன் அவ்விடத்தை அடைந்துவிட்டார் என கூறப்படுகிறது.

கொலம்பஸ் பற்றி உலகமே இன்று வரை ஏமார்ந்து கொண்டிருக்கும் உண்மைகள்! கொலம்பஸ் பற்றி உலகமே இன்று வரை ஏமார்ந்து கொண்டிருக்கும் உண்மைகள்! Reviewed by Bright Zoom on August 28, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.