TNPSC-GK - சிலப்பதிகாரம் பற்றிய தகவல்கள்...!!

TNPSC-GK - சிலப்பதிகாரம் பற்றிய தகவல்கள்...!!




பொதுத்தமிழில் பல பயனுள்ள தகவல்களை கொடுத்து கொண்டு வருகிறோம். 

இன்று சிலப்பதிகாரம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். சிலப்பதிகாரமானது ஐம்பெரும் காப்பியங்களுல் ஒன்று.

சிலப்பதிகாரத்தில் இயல், இசை, நாடகம் என மூன்றினை பற்றி தெளிவாக எடுத்துரைப்பதால் பாட்டிடையிட்ட தொடர்நிலை செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது.

தன் அண்ணன் நாடாள வேண்டும் என்று, இளங்கோவடிகள் தனது இளவரசர் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியை பற்றிய செய்தியை சீத்தலை சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்து கொண்டார்.

கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை, இளங்கோவடிகள் படைத்துள்ளார்.

சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது.

இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலை சாத்தனார் என்னும் புலவர் ஆவார்.

கண்ணகி கோவில் உள்ள இடம் திருவாஞ்சிக்களம். இந்நூலில் ஊர்சூழ்வரி என்பது இசைப்பாடல்.மேலும், இந்திரவிழாவானது 28 நாட்கள் நடைபெறும்.

முக்கிய பாடல் வரிகள் – “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்”


சிலப்பதிகாரத்தை பற்றிய முக்கிய குறிப்புகள்:

கதை மாந்தர்கள்:

கண்ணகி - சிலப்பதிகாரத்தில் பாட்டுடைத் தலைவி மற்றும் கோவலனது மனைவி. ஒழுகத்தின எடுத்துகாட்டாகவும், கற்புநெறியின் அளவுகோலாகவும் படைக்கப்பட்டவள். கணவனுக்காக மதுரை மாநகரையே எரித்தவள்.

கோவலன் - பெரும் செல்வந்தர் மாசாத்துவானின் மகன். பிற ஒழுக்கங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் மோகத்தால் அழிந்தவன். ஊழ்வினை காரணமாக உயிரிழந்தவன்.

மாதவி - பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய்.

நூல் அமைப்பு:

சிலப்பதிகாரம் 3 காண்டங்களையும்,, 30 காதைகளையும், 5001 வரிகளையும் கொண்டுள்ளது.

3காண்டங்கள் : புகார் காண்டம்(10), மதுரை காண்டம்(13), வஞ்சிக் காண்டம்(7)

முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல்

இறுதி காதை = வரந்தருகாதை

புகார் காண்டம்:

புகார் காண்டத்தில் உள்ள காதைகள் = 10

முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல் காதை

பத்தாவது காதை = நாடுகாண் காதை



மதுரைக் காண்டம்:

மதுரைக் காண்டத்தில் உள்ள காதை = 13

11வது காதை = காடுகாண் காதை

23வது காதை = கட்டுரைக் காதை

 

வஞ்சிக் காண்டம்:

வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதை = 7

24வது காதை = குன்றக்குரவை காதை

30வது காதை = வரந்தருகாதை



சிலப்பதிகாரத்தின் அடிப்படையான மூன்று கருத்துகள்:
1. அரசியலில் தவறு செய்வோர்க்கு அறக்கடவுள் எமனாகும்

2. புகழ்பெற்ற பத்தினியை மேலோர் போற்றுவர்

3. ஊழ்வினை தவறாது தன் பயனை ஊட்டும்

என்பன அவை. இவற்றோடு தமிழர்தம் நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகவும் திகழ்கிறது.

உரைகள்:

அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்.

அடியார்க்கு நல்லாரின் உரை

ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை

ஆசிரியர் குறிப்பு:

பெயர் = இளங்கோவடிகள்

பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோணை

அண்ணன் = சேரன் செங்குட்டுவன்

சிலப்பதிகாரத்தின் வேறுப்பெயர்கள்

தமிழின் முதல் காப்பியம்

உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்

முத்தமிழ்க்காப்பியம்

முதன்மைக் காப்பியம்

பத்தினிக் காப்பியம்

நாடகப் காப்பியம்

குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)

புதுமைக் காப்பியம்

பொதுமைக் காப்பியம்

ஒற்றுமைக் காப்பியம்

ஒருமைப்பாட்டுக் காப்பியம்

தமிழ்த் தேசியக் காப்பியம்

மூவேந்தர் காப்பியம்

வரலாற்றுக் காப்பியம்

போராட்ட காப்பியம்

புரட்சிக்காப்பியம் சிறப்பதிகாரம்(உ.வே.சா)

பைந்தமிழ் காப்பியம்

முக்கிய சிறப்புகள்:

 “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்றார் பாரதியார்.

”தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதோறும் சிலப்பதிகாரம்” என்றார்

    கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை.

”சிலப்பதிகாரம் என்பதைவிட சிறப்பு அதிகாரம் என்பதே சிறந்தது” என்றார் உ.வே சாமிநாத ஐயர்.

ஒரு தடவை படித்தால் மட்டும் இந்த பகுதியை முழுதாக மனதில் நிறுத்திக்கொள்ள முடியாது. எனவே, திரும்ப ஒருமுறை படித்து மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்...

சிலப்பதிகாரம் பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களும், TNPSC தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் Whatsapp, Facebook வாயிலாக   Share செய்திடுங்கள்.

Bright Zoom

TNPSC-GK - சிலப்பதிகாரம் பற்றிய தகவல்கள்...!! TNPSC-GK - சிலப்பதிகாரம் பற்றிய தகவல்கள்...!! Reviewed by Bright Zoom on August 22, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.