கேட் - 2019 தேர்வு அறிவிப்பு

கேட் - 2019 தேர்வு அறிவிப்பு




By:Bright Zoom


2019ம் ஆண்டிற்கான கேட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ.,/பி.டெக்.,/பி.ஆர்க் ஆகிய பட்டப்படிப்புகளை முடித்து பொதுத்துறையில் இன்ஜினியராக பணிபுரிய விரும்புபவர்கள், எம்.இ.,/எம்.டெக்., படிப்பில் சேர விரும்புபவர்கள், அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் மேற்படிப்பு படிக்க அரசின் கல்வித் தொகை பெற விரும்புபவர்கள் ஐஐடி-யால் நடத்தப்படும் கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்வு: கேட்-2019.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பொறியியல் பிரிவில் பி.இ./பி.டெக்., பட்டம் அல்லது ஏஎம்ஐஇ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.ஆர்க் பட்டம்/ 4 வருட பி.எஸ். பட்டம்/ அல்லது அறிவியல்/கணிதம்/புள்ளியியல்/கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி பட்டம் அல்லது ஒருங்கிணைந்த எம்.எஸ்சி பட்டம்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும், ஒபிசியினருக்கு ரூ1500. எஸ்சி.,எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு ரூ 750/-. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் கேட்-2019 தேர்வு சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், திருச்செங்கோடு (ஈரோடு), நாகர்கோவில் (குமரி), கரூர், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, வேலூர் விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும்.

www.gate.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.09.2018.


கேட் - 2019 தேர்வு அறிவிப்பு கேட் - 2019 தேர்வு அறிவிப்பு Reviewed by Bright Zoom on September 12, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.