UPSC மற்றும் TNPSC Exam
நடப்பு நிகழ்வுகள்
செப்டம்பர்-12 (12 -9-2018)
சீனா மற்றும் மங்கோலியாவுடன் இணைந்து நடத்தப்படும் இந்தப் போர் ஒத்திகையில், 1,000-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், 3 லட்சம் வீரர்கள், 36,000 ராணுவ தளவாடங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிகழ்வுகள்
செப்டம்பர்-12 (12 -9-2018)
தமிழகம்
1.பிரதமரின் ‘ஜன் ஆரோக்யா யோஜனா’, ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தானது.
2.புதுச்சேரி, காரைக்காலில் உள்ள இரு முக்கிய சாலைகளுக்கும், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்துக்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட புதுவை அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்தியா
1.தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் மூன்று தேசிய விருதுகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. இவை தவிர இதர மூன்று விருதுகளும் வழங்கப்பட்டன.
2.அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் சமூக நல பணியாளா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை வரும் அக்டோபா் மாதம் முதல் உயா்த்தப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்தாா்.
வர்த்தகம்
1.டாலருக்கு நிகரான, அன்னியச் செலாவணி மதிப்பு குறைவால், ஏழு வளரும் நாடுகள், இடர்ப்பாட்டை சந்திக்க வாய்ப்புள்ளதாக, ஜப்பானைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான, ‘நோமுரா’ தெரிவித்துள்ளது.
2.பயணிகள் வாகன விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக சென்ற ஆகஸ்டிலும் 2.46 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
உலகம்
1.பனிப் போர் காலத்துக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான போர் ஒத்திகையை ரஷியா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சீனா மற்றும் மங்கோலியாவுடன் இணைந்து நடத்தப்படும் இந்தப் போர் ஒத்திகையில், 1,000-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், 3 லட்சம் வீரர்கள், 36,000 ராணுவ தளவாடங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2.உலக அளவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விளையாட்டு
1.ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டி இரண்டாம் சுற்றுக்கு இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, கே.ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
2.போலந்தில் நடைபெற்று வரும் 13-ஆவது சைலிஷியன் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் வென்றார். லவ்லினா ஏற்கெனவே இந்தியா ஓபனில் தங்கம், உலன்பட்டார் கோப்பையில்
வெண்கலம் வென்றார்.
வெண்கலம் வென்றார்.
இன்றைய தினம்:
- ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார்(1609)
- சுவிட்சர்லாந்து, கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது(1848)
- ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டது(1890)
- துருக்கியில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1980)
Bright Zoom.
UPSC மற்றும் TNPSC Exam நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர்-12(12-9-2018)
Reviewed by Bright Zoom
on
September 12, 2018
Rating:
No comments: