வரலாற்று நினைவு சின்னங்கள், கட்டிட கலைகள் பற்றிய Shortcuts, Tips and Tricks
TNPSC Group 2 தேர்விற்கு பயன்படும் வகையில் வரலாற்று நினைவு சின்னங்கள், கட்டிட கலைகள் பற்றிய Tips & Tricks கொடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று நினைவு சின்னங்கள் பற்றிய தகவல்கள்:
இந்திய நாடு மிகப்பெரிய வரலாற்றை கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஆயிரம், இரெண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடங்களும், கோயில்களும் இந்தியாவில் ஏராளம் நிறைந்துள்ளன.
நம் நாட்டில் வாழ்ந்து சரித்திரம் படைத்த, ஒவ்வொரு அரசர்களும் தங்களுடைய வரலாற்றினை குகைகள், கோட்டை வாயில்கள், மசுதிகள், சிற்பங்களின் வழியாகவும் பதிக்கவும், எழுதவும் செய்தனர்.
இதன் வாயிலாக அந்தகால அரசர் மற்றும் மக்களின் வரலாற்றினை அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் அக்கால மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள இயலுகிறது. அதில் புகழ்பெற்ற வரலாற்று நினைவு சின்னங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பாடலிபுத்திரக் கோட்டை – மௌரிய வரலாறு
அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் – குப்தர் கால வரலாறு
மாமல்லபுர சிற்பங்கள் – பல்லவர் வரலாறு
பேலூர் ஹளபீடு – ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு
குதுப்மினார், டெல்லி நரோக்கள் – டெல்லி சுல்தானியர் வரலாறு
ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் – முகலாய வரலாறு
கட்டிடக்கலை:
முற்காலத்திலும், பிற்காலத்திலும் நம் நாட்டை ஆண்ட பல்வேறு அரசர்கள் கட்டிட கலையில் சிறந்து விளங்கியுள்ளனர். மேலும் இவர்களால் பல கட்டிட கலைஞ்ர்கள் ஊக்குவிக்கபட்டுள்ளனர் என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகள் சிறந்த எடுத்து காட்டுகளாகும்.
தென்னிந்தியர் கட்டிட கலையில் திருப்புமுனையாக அமைந்தது பல்லவர்கால கட்டிட கலையாகும். இவர்களது காலத்தை திராவிட கட்டிட கலைகளின் ஆரம்ப காலம் என்பர்.
தென்னிந்தியர் கட்டிட கலையில் திருப்புமுனையாக அமைந்தது பல்லவர்கால கட்டிட கலையாகும். இவர்களது காலத்தை திராவிட கட்டிட கலைகளின் ஆரம்ப காலம் என்பர்.
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சாவூர் கோவில், கட்டிட கலைக்கு மற்றொரு மிகச் சிறந்த எடுத்துகாட்டாகும்.
குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி)
எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம்
ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி)
எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள்
கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி)
எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில்
மண்டபக் கோயில்கள்
எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர் கோயில், திருத்தணி கோயில்
பிறவகை கோயில்கள்
எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், கூரம் கேசவப் பெருமாள் கோயில்
காஞ்சி கைலாசநாதர் கோயில் – ராசசிம்மப் பல்லவன்
காஞ்சி கைலாசநாதர் கோயில் – ராசசிம்மப் பல்லவன்
மாமல்லபுர கோயில் – முதலாம் நரசிம்மவர்மன்
காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் – இரண்டாம் நந்திவர்மன்
மதுரை மீனாட்சி அம்மன் – குலசேகர பாண்டியன்
தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் – இராஜராஜ சோழன்
ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் – சுந்தரபாண்டியன்
இதனை ஒருமுறை படிச்சிட்டு விட்டுடமா, இதனை பல முறை நினைவுப்படுத்தினால், வரலாற்று நினைவு சின்னங்கள் மற்றும் கட்டிடகலை பற்றிய தகவல்கள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விடும்.
இதனை ஒருமுறை படிச்சிட்டு விட்டுடமா, இதனை பல முறை நினைவுப்படுத்தினால், வரலாற்று நினைவு சின்னங்கள் மற்றும் கட்டிடகலை பற்றிய தகவல்கள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விடும்.
இவ்வளதாங்க! நீங்க நினைவில் வைத்து கொள்ள வேண்டியது மேலே குறிப்பிட்ட வரலாற்று நினைவு சின்னங்கள் மற்றும் கட்டிடகலை பற்றிய தகவல்கள் மிக முக்கியமானவை. இதை எளிதாக நினைவில் வைத்து கொண்டாலே போதுமான மதிப்பெண்கள் நமக்கு எளிதாக கிடைத்துவிடும்.
ஒரு தடவை படித்தால் மட்டும் இந்த பகுதியை முழுதாக மனதில் நிறுத்திக்கொள்ள முடியாது. எனவே, திரும்ப ஒருமுறை படித்து மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்…
வரலாற்று நினைவு சின்னங்கள் மற்றும் கட்டிடகலை பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களும், TNPSC தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் Whatsapp, Facebook வாயிலாக கீழ்க்கண்ட பட்டனை அழுத்தி Share செய்திடுங்கள்!!!…
வரலாற்று நினைவு சின்னங்கள், கட்டிட கலைகள் பற்றிய Shortcuts, Tips and Tricks
Reviewed by Bright Zoom
on
September 23, 2018
Rating:
No comments: