சிறப்பு நூல்கள் மற்றும் அதன் அடைமொழிகள் பற்றிய தகவல்கள்

TNPSC Group 2 GT- Sirappu Noolkalum Athan Adai Mozhikalum


TNPSC குரூப் 2 Shortcuts, Tips and Tricks – சிறப்பு நூல்கள் மற்றும் அதன் அடைமொழிகள் பற்றிய தகவல்கள்



சிறப்பு நூல்கள் மற்றும் அதன் அடைமொழிகள் பற்றிய Shortcuts, Tips and Tricks
TNPSC Group 2 தேர்விற்கு பயன்படும் வகையில் சிறப்பு நூல்கள் மற்றும் அதன் அடைமொழிகள் பற்றிய Tips & Tricks கொடுக்கப்பட்டுள்ளது.
💥திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் – திருவள்ளுவ மாலை.
💥திருக்குறள் – வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, முப்பால், வள்ளுவப் பயன், பொய்யாமொழி, தெய்வநூல், உலகப்பொதுமறை, உத்திரவேதம், முப்பால், பொதுமறை, திருவள்ளுவம்
💥சிலப்பதிகாரம் – ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சிலம்பு, முதல் காப்பியம், சமுதாயக் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.
💥கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம்,கம்ப நாடகம்.
💥பெரியபுராணம்: – திருத்தொண்டர் புராணம், சேக்கிழார் புராணம், வழிநூல்,
💥மணிமேகலை – மணிமேகலை துறவு, மணிமேகலை, குண்டலகேசி, பௌத்தக் காப்பியங்கள்
💥சீவகசிந்தாமணி – மணநூல், முக்திநூல், காமநூல், மறைநூல், முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்), இயற்கை தவம், முதல் விருத்தப்பா காப்பியம்


💥இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம்,மணிமேகலை
💥அகநானூறு – நெடுந்தொகை
💥புறநானூறு – புறம், புறப்பட்டு, தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
💥பழமொழி – முதுமொழி, உலக வசனம்
💥பட்டினப்பாலை – வஞ்சிநெடும் பாட்டு
💥கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
💥திருமுருகாற்றுப்படை – புலவராற்றுப் படை
💥பெரும்பானாற்றுப்படை – பாணாறு
💥மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை
💥முல்லைப்பாட்டு – நெஞ்சாற்றுப்படை
💥குறிஞ்சிப்பாட்டு – பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு
💥96 வகை சிற்றிலக்கிய நூல் – சதுரகாதி
💥கிறித்துவர்களின் களஞ்சியம் – தேம்பாவணி
💥இலக்கண விளக்கம் – குட்டித் தொல்காப்பியம்
💥திருவாசகம் – தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
💥64 புராணங்களைக் கூறும் நூல் – திருவிளையாடற் புராணம்
💥பெருங்கதை – அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை
💥பெரிய புராணம் – திருத்தொண்டர் புராணம், வழிநூல், திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம்
💥திருமந்திரம் – தமிழர் வேதம், தமிழ் மூவாயிரம்
💥திருக்கயிலாய ஞான உலா – குட்டித்திருவாசகம்
💥 நேமிநாதம் – சின்னூல்
💥நீலகேசி – நீலகேசி தெருட்டு
💥தாயுமானவர் பாடல்கள் – தமிழ் மொழியின் உபநிடதங்கள்
💥இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு
💥இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை
💥இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்
💥இயற்கை இன்ப வாழ்வு நிலையம் – சிலப்பதிகாரம் /மணிமேகலை
💥பாவைப்பாட்டு – திருப்பாவை
💥குற்றாலக் குறவஞ்சி – குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம்
💥குழந்தை இலக்கியம் – பிள்ளைத் தமிழ்
💥கலித்தொகை – கற்றறிந்தார் ஏற்கும் நூல்
💥நறுந்தொகை – வெற்றி வேட்கை, திராவிட வேதம்,தமிழ் மறை வேதம், திருவாய் மொழி


💥அறவுரைகோவை என்று சிறப்பிக்கப்படும் நூல் – முதுமொழிக்காஞ்சி
💥திருமுருகாற்றுப்படை சிறப்பு பெயர்கள் – புலவராற்றுப்படை
💥முக்கூடற்பள்ளு சிறப்பு பெயர்கள் – உழத்திபாட்டு
💥புறநானூறு சிறப்பு பெயர்கள் – வரலாற்று களஞ்சியம்
💥பதினெட்டு உறுப்புகளை கொண்டு பாடப்பெற்ற நூல் – கலம்பகம்
💥நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் – நாலடியார்
💥தமிழரின் இரு கண்கள் – தொல்காப்பியம் /திருக்குறள்


💥இதனை ஒருமுறை படிச்சிட்டு விட்டுடமா, நூல்களை பற்றிய தகவல்களை பல முறை நினைவுப்படுத்தினால், பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விடும்.
💥ஒரு தடவை படித்தால் மட்டும் இந்த பகுதியை முழுதாக மனதில் நிறுத்திக்கொள்ள முடியாது. எனவே, திரும்ப ஒருமுறை படித்து மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்…
💥சிறந்த நூல்களும் அதன் அடைமொழிகள் பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களும், TNPSC தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் Whatsapp, Facebook வாயிலாக கீழ்க்கண்ட பட்டனை அழுத்தி Share செய்திடுங்கள்!!!…
Bright Zoom.

சிறப்பு நூல்கள் மற்றும் அதன் அடைமொழிகள் பற்றிய தகவல்கள் சிறப்பு நூல்கள் மற்றும் அதன் அடைமொழிகள் பற்றிய தகவல்கள் Reviewed by Bright Zoom on September 11, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.