மந்திர முருங்கை !!

முருங்கையில்  இப்படியொரு அற்புதம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

மந்திர முருங்கை  !!

🌿 முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், பதற்றத்தை தணிக்கவும் வல்லது. முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியமே வராது.

🌿 சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

🌿 மனிதர்களுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனிதர்களுக்கு தேவையான எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை மட்டுமே.

🌿 ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

🌿 குழந்தையின்மை பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். இது நரம்புகளுக்கு அதிக வலுக்கொடுக்கும்.

🌿 முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் 'சி" கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

🌿 இன்றைய அதிவேக சமுதாய சூழலில் நாம் தினசரி உணவில் முருங்கை கீரையை எடுத்துக்கொள்வது கடினம்தான். இதை எளிதாக்க முருங்கை இலையை நன்கு காயவைத்து பொடி செய்து பருப்பு, காரம் போன்ற சுவை சேர்த்து அசத்தலான சுவையுடன் முருங்கை இலை பொடி தயார் செய்கின்றனர் 

நல்லதையே உண்போம் நலமோடு வாழ்வோம் !!






மந்திர முருங்கை !! மந்திர முருங்கை  !! Reviewed by Bright Zoom on September 25, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.