TNPSC- GK (செப்டம்பர் -26-2018)
இன்றய நடப்பு நிகழ்வுகள்...!!
தமிழகம்:
1.மலேசியாவிலிருந்து கப்பலில் ஏற்றி வரப்பட்ட 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணலை 48 மணி நேரத்தில் இறக்கி காமராஜர் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
2.ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிட்னி தமிழ் இலக்கியக் கலை மன்றம் சார்பில் அனைத்துலகச் சிலப்பதிகார ஆய்வு மாநாடு நடைபெற்றது.
இந்தியா:
1.அரசியலில் கிரிமினல்கள் ஈடுபடுவதைத் தடுக்க நாடாளுமன்றம் கடுமையான சட்டத்தினை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
2.நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.), சட்டப்பேரவை உறுப்பினர் (எம்எல்ஏ), சட்டமேலவை உறுப்பினர் (எம்எல்சி) ஆகியோர் பதவியில் இருக்கும்போது நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் எனக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
3.டி-72 டாங்கிகளுக்கு ரூ.2,300 கோடி மதிப்பில் என்ஜின்கள் வாங்குவதற்கு ஆயுத தளவாட கொள்முதல் கவுன்சில் (டி.ஏ.சி.) ஒப்புதல் அளித்துள்ளது.
4.ஆதார் உள்பட 5 முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிடவுள்ளது.
வர்த்தகம்:
1.கடந்த மூன்று ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 5 மடங்கு அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
உலகம்:
1.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு, அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பில் இதுவரை அளிக்கப்பட்டு வந்த முன்னுரிமையை ரத்து செய்ய அந்த நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு:
1.கிரிக்கெட் வீரர் விரோட் கோலி, பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் ரத்ன விருதுகள், தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஜி.சத்யனுக்கு அர்ஜுனா விருது, உள்பட பல்வேறு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு அர்ஜூனா, துரோணாச்சார்யா விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
2.சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றதின் மூலம் ரொனால்டோ,மெஸ்ஸியின் 10 ஆண்டுக்கால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துளளார் குரோஷிய வீரர் லுகா மொட்ரிக்.
இன்றைய தினம்:
உலக கடல்சார் தினம்.
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த தினம்(1932).
கர்நாடக இசை அறிஞர் பாபநாசம் சிவன் பிறந்த தினம்(1890)
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நினைவு தினம்(1954)
ஏமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
இந்தோனேஷியா ஐநாவில் இணைந்தது(1950)

TNPSC- GK (செப்டம்பர் -26-2018) இன்றய நடப்பு நிகழ்வுகள்...!!
Reviewed by Bright Zoom
on
September 26, 2018
Rating:
No comments: