TNPSC - தேர்வுக்கு வழிகாட்டி
💨 அரசுப் பணிக்கான தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இந்த தொகுப்பில் பல தகவல்களை நித்ரா வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று குரூப் ஐ-டீ தேர்வு எழுத என்ன தகுதி வேண்டும்? எப்படிப்பட்ட வேலை கிடைக்கும்? எந்த மாதிரியான தேர்வு முறைகள் இருக்கும்? இது போன்ற பல கேள்விகளுக்கு நாங்கள் விடை தருகிறோம்.
தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வு : Group I-B
பணியின் பெயர் : Assistant Commissiner (உதவி ஆணையாளர்)
தேர்வு செய்யப்படும் முறை :
1. முதல்நிலைத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. வாய்மொழித் தேர்வு
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
21 ஆண்டிற்கு மேல் இருக்க வேண்டும். (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
ஊதியளவு :
ரூ. 15600 - ரூ. 39100 + தர ஊதியம் ரூ. 5400 (மாதம்)
அதிகாரப்பூர்வ வளைதளம் - http://www.tnpsc.gov.in/
💨 புதிதாக போட்டித் தேர்விற்கு தயாராகிறவர்கள், எங்கிருந்து தொடங்கலாம் என்று யோசித்த வண்ணமே பல நாட்களைக் கடப்பதைப் பார்த்திருக்கிறோம்.
💨 எங்கு தொடங்குவது என்பதை சரியாக தீர்மானித்தால், உங்கள் வழி சிறப்பாக அமையும். இந்த தொடக்கப் புள்ளியை தேர்ந்தெடுக்க நான்கைந்து நாட்களாவது ஒதுக்கினால் கூடப் பரவாயில்லை. இவ்வாறு தேர்ந்தெடுப்பதால், கணிசமான மதிப்பெண்ணை வெகு எளிதில் பெற முடியும்.
💨 உள்ள ர் நடப்பு நிகழ்வுகள் முதல் உலக நடப்பு நிகழ்வுகள் வரை எனக்கு தெரியும் என்று எவரால் உரக்கச் சொல்ல முடிகிறதோ அவருக்கு, போட்டித் தேர்வுகளில் சில மதிப்பெண்கள் உறுதியாகிவிட்டது.
💨 இன்றைய பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோன்.
TNPSC - தேர்வுக்கு வழிகாட்டி
Reviewed by Bright Zoom
on
September 27, 2018
Rating:
No comments: