Fire Engineering துறையின் சிறப்புகளும், வேலைவாய்ப்புகளும்....


Fire Engineering துறையின் சிறப்புகளும், வேலைவாய்ப்புகளும்....

தீ விபத்துக்கள் ஏற்படுவதையும், அவற்றிலிருந்து பாதுகாக்கும் முறைகளைப் பற்றி படிக்க தனி துறையே உள்ளது அது தான் Fire Engineering துறை!

தீ விபத்துக்களின் போது பயன்படுத்தப்படும் சாதனங்களை மறுவடிவமைப்பது, புதிய சாதனங்களை உருவாக்குவது போன்ற பணிகள் குறித்து இப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது.

மேலும், தீவிபத்து ஏன் ஏற்படுகிறது, தீ விபத்தை கண்டு பிடிக்கும் முறை, தீ விபத்தின் சேதத்தைக் குறைக்கும் ஸ்பிரிங்க்ளர் போன்ற சாதனங்களைப் பொருத்துவது பற்றியும் இந்த படிப்பில் சொல்லிதரப்படுகிறது.

தகவல் தொடர்புத்திறன், பிரச்னைகளின் மையத்தில் முடிவெடுக்கும் திறன், நல்ல தைரிமான மனநிலை போன்ற விடயங்கள் ஒருவருக்கு இருப்பின் இத்துறையை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம்.

இதில் மூன்றாண்டு பி.டெக் பட்டபடிப்பும், மூன்றரை ஆண்டு பி.இ பட்ட படிப்பும் உள்ளது.

பனிரெண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த Fire Engineering படிப்பில் சேர முடியும்

வேலைவாய்ப்பை பொருத்தவரை அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் நிர்வாக மட்டத்தில் கணிசமான வேலை வாய்ப்புகள் உள்ளது.

பெட்ரோலிய கிணறுகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், எரிவாயு நிறுவனங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.


Fire Engineering துறையின் சிறப்புகளும், வேலைவாய்ப்புகளும்.... Fire Engineering துறையின் சிறப்புகளும், வேலைவாய்ப்புகளும்.... Reviewed by Bright Zoom on December 25, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.