தமிழ் இலக்கணம் யாப்பு தமிழ் இலக்கண யாப்புஒரு எளிய அறிமுகம்

                                                        

     தமிழ் இலக்கணம் யாப்பு

தமிழ் இலக்கண யாப்புஒரு 
எளிய அறிமுகம்
 
நமது பழங்கால தமிழ் இலக்கியங்களைசுவைக்க வேண்டுமெனில் நமக்கு யாப்புமுறையாக தெரிந்து இருக்க வேண்டும் .யாப்பு என்பதற்கு பொருள் கட்டுதல்என்பதாகும் அதாவது செய்யுளைகட்டுவதாகும் யாப்பினால்தான்கலங்களை கடந்தும் கட்டழகுகுலையாமல் தமிழ் விளங்கி வருகிறது .எழுத்துஅசை , சீர் , தளைஅடி தொடைஎன்பன யாப்பின் உறுப்புகள் வாருங்கள் நண்பர்களே யாப்பு எனும் கடலில் மூழ்கிமுத்தெடுக்கலாம் .

எழுத்து

செய்யுளை இயற்ற அடிப்படையானதுஎழுத்து ஆகும் .உயிரெழுத்துகள் , மெய்எழுத்துகள் , உயிர்மெய் எழுத்துகள்ஆகியன இவற்றில் அடங்கும்

அசை

எழுத்து தனித்து நின்றோ , பல எழுத்துசேர்ந்து நின்றோ ஓசை உண்டாகுமாறுநிற்பது அசை ஆகும் . இது நேரசை ,நிரையசை என இருவகைப்படும் நேரசைகண்டு பிடிக்கும் வழிமுறைகளைதெரிந்து கொள்ளும் முன் குறில் , நெடில்ஒற்று என்பதை அறிவோம்
குறில் : குறுகிய ஓசை உடையது குறில்ஆகும்
நெடில் : நீண்ட ஓசை உடையவை நெடில்ஆகும்
ஒற்று : புள்ளி வைத்து எழுதப்படும்எழுத்து

நேரசை கண்டு பிடிக்கும்வழிமுறைகள்

குறில் தனித்து வருவதும் , குறிலைஅடுத்து ஒற்று வருவதும் , நெடில் தனித்துவருவதும் , நெடிலை அடுத்து ஒற்றுவருவதும் நிரையசை ஆகும்
சொல்/ = குறிலை அடுத்து ஒற்று /குறில்தனித்து
மா = நெடில் தனித்து
மான் = நெடிலை அடுத்து ஒற்று


நிரையசை கண்டு பிடிக்கும்வழிமுறைகள்

இரு குறில் தனித்தும் , இரு குறில்அடுத்து ஒற்று வருவதும் , குறில்நெடில்தனித்தும் , குறில் நெடில் அடுத்து ஒற்றுவருவதும்  நிரையசையாகும்

பல – இரு குறில் தனித்து வருவது
மலர் – இரு குறில் அடுத்து ஒற்று வருவது
பலா – குறில் நெடில் தனித்து வருவது
வரார் – குறில் நெடில் அடுத்து ஒற்றுவருவது

சீர்

அசை  ஒன்றோ பலவோ சேர்ந்து அடிக்குஉறுப்பாவது சீர் ஆகும் இது ஓரசை சீர் ,ஈரசை சீர் , மூவசை சீர் , நான்கசை சீர்
ஓரசை சீர்
நேர் – நாள்
நிரை – மலர்
ஈரசை சீர்
நேர்/நேர் – தேமா
நிரை/நேர் – புளிமா
நிரை/நிரை – கருவிளம்
நேர்/நிரை – கூவிளம்
மூவசைசீர்

நேர்/நேர்/நேர் – தேமாங்காய்
நிரை/நேர்நேர் – புளிமாங்காய்
நிரை/நிரை/நேர் – கருவிளங்காய்
நேர்/நிரை/நேர் – கூவிளங்காய்
நேர்/நேர்/நிரை – தேமாங்கனி
நிரை/நேர்/நிரை – புளிமாங்கனி
நிரை/நிரை/நிரை – கருவிளங்கனி
நேர்/நிரை/நிரை – கூவிளங்கனி


தளை

நின்ற சீரின்  ஈற்றசையும் ,வருஞ்சீரின்முதலசையும் ஒன்றியே , ஒன்றாமலோவருவது தளை ஆகும் இது ஒன்றியவஞ்சித்தளை , ஒன்றாவஞ்சித்தளை ,கலித்தலை ,வெண்சீர் வெண்டளை , நேரொன்றாசியத்தளை ,நிரையொன்றாசிரியத்தளை என ஏழுவகைப்படும்

அடி

சீர்கள் தொடர்ச்சியாக அமைவதுஅடியாகும்
இரண்டு சீர்க்களால் ஆகிய அடிக்குகுறளடி என்று பெயர்
மூன்று சீர்களால் ஆகிய அடிக்கு சிந்தடிஎன்று பெயர்
நான்கு சீர்களால் ஆகிய அடிக்கு அளவடிஎன்று பெயர்
ஐந்து சீர்களால் ஆகிய அடிக்கு நெடிலடிஎன்று பெயர்
ஆறு சீர்களால் ஆகிய அடிக்குகழிநெடிலடி என்று பெயர்

தொடை

எழுத்துகள் ஒன்றி வர தொடுப்பதுதொடை ஆகும்  செய்யுளுக்கு ஓசைநயத்தை கொடுப்பவை தொடை ஆகும்இவை எதுகைத்தொடை ,மோனைத்தொடைமுரண்தொடை,இயைபுதொடைஅளபெடைத்தொடைஎன ஐந்து வகைப்படும்
அன்புள்ள நண்பர்களே …
யாப்பு என்பது ஒரு கடல் அதில் மூழ்கிமுத்தெடுக்க வேண்டும் எனில்  யாப்பின்உறுப்புகளுக்கு செய்யுள்களுடன்விளக்கமளிக்க வேண்டும் எனவேயாப்பின் உறுப்புகள் பற்றி ஒரு தொடர்பதிவு இடலாம் என கருதியுள்ளேன் இதற்கு உங்களின் ஆதாரவு மிக மிகஅவசியம் மேலும் உங்களின் மேலானகருத்துகளை எதிர் நோக்குகிறேன்

 பெயரெச்சம்:

        
ஒரு வினைச்சொல்லானதுபெயர்ச்சொல்லைக் கொண்டுமுடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும்.

         (
.கா)  படித்த மாணவன்,வந்தவாகனம்,தந்த பணம்,கண்டகனவு,சென்ற நாட்கள்

         
மேற்கணடவற்றுள்படித்த,வந்த,தந்த,கண்ட,சென்றபோன்றவை பெயரெச்சங்கள் ஆகும்.
பெயரெச்சத்தை எப்படி எளிதாககண்டுபிடிப்பது?

            
படித்த மாணவன்,வந்தவாகனம்,தந்த பணம்,கண்டகனவு,சென்ற நாட்கள் போன்றவாக்கியங்களைக் கொடுத்து இதன்இலக்கண வகை என்ன என்றுகேட்டால்.நீங்கள் முதலில் உள்ள படித்த,வந்த,தந்த,கண்ட,சென்றபோன்றவற்றை கணக்கிட்டுதான்பெயரெச்சம் என எண்ண வேண்டும்.அதற்காகத்தான் அவை அடிக் கோடிட்டுகாட்டப்பட்டிருக்கிறது.

           
ஒரு வேளை தந்த,சென்ற என்றுமட்டும் கேட்கப்படலாம்

         
முதலில் படித்த,வந்த,சென்ற போன்றவார்த்தைகளை நன்றாக உச்சரித்துப்பாருங்கள்.அவ்வார்த்தைகள 'என்னும்சத்தத்தோடு முடியும்..
விளக்கம்:
படித்தஇதன் கடைசி எழுத்து ''

'
என்ற எழுத்தை பிரித்தால் த்+ என்றுபிரியும்..
இப்படி வார்த்தையின் இறுதியில் ''என்னும் சத்தம் ஒலித்தால் அதுபெயரெச்சம் தான் என முடிவெடுத்துக்கொள்ளவும்.
பெயரெச்சத்தின் வகைகள்:

.தெரிநிலைப் பெயரெச்சம் .குறிப்புப்பெயரெச்சம்
.எதிர்மறைப் பெயரெச்சம் .ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சம்
என வகைப்படும்.
.தெரிநிலைப் பெயரெச்சம்

      
காலத்தை வெளிப்படையாகக் காட்டிசொல் முடியாமல் நின்று
பெயர்ச்சொற்களைக் கொண்டுமுடிந்தால் அது தெரிநிலைப்பெயரெச்சமாகும்இது மூன்றுகாலங்களிலும் வரும்.

(
.கா) படித்த மாணவன்
             
படிக்கின்ற மாணவன்
             
படிக்கும் மாணவன்
.குறிப்புப் பெயரெச்சம்

          
காலத்தை வெளிப்படையாகக்காட்டாமல் செயலை உணர்த்தாமல்,பண்பினை மட்டும் உணர்த்திபெயர்ச்சொல்லாக முடிந்தால் அதுவேகுறிப்பு பெயரரெச்சம் எனப்படுகிறது.

(
.கா.) நல்ல பையன்
              
அழகிய மயில்
.எதிர்மறைப் பெயரெச்சம்

(
.கா.) பாடாத பைங்கிளி
              
கேட்காத செவி
              
பேசாத பெண்
.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

 
ஈற்றெழுத்து கெட்டுவரும்எதிர்மறைப்பெயரெச்சம் ஈறுகெட்டஎதிர்மறைப்
பெயரெச்சமாகும். “” எனும் விகுதியில்முடியும்.

(
.கா.) பாடா பைங்கிளி
              
பொய்யா மொழி
              
வாடா மலர்
              
பேசா வாய்
              
சிந்தா மணி
               
மாறா அன்பு
              
செல்லா காசு
              
தேரா மன்னா

வினையெச்சம்:

           
முடிவு பெறாத வினைச்சொல்லேவினையெச்சம் ஆகும்.

 (
.கா)  படித்து முடித்தான்,வந்துசென்றான்,ஓடி  மறைந்தான்,பாடிமுடித்தான்,சென்று வந்தான்.


                
மேற்கணடவற்றுள்படித்து,வந்து,ஓடி,பாடி,சென்றுபோன்றவை வினையெச்சங்கள் ஆகும்.
வினையெச்சத்தை எப்படி எளிதாககண்டுபிடிப்பது?

            
படித்து முடித்தான்,வந்துசென்றான்,ஓடி  மறைந்தான்,பாடிமுடித்தான்,சென்று வந்தான் போன்றவாக்கியங்களைக் கொடுத்து இதன்இலக்கண வகை என்ன என்றுகேட்டால்.நீங்கள் முதலில் உள்ள படித்து,வந்து,ஓடி,பாடி,சென்றுபோன்றவற்றை கணக்கிட்டுதான் அவைவினையெச்சம் என எண்ண வேண்டும்.அதற்காகத்தான் அவை அடிக் கோடிட்டுகாட்டப்பட்டிருக்கிறது.

           
ஒரு வேளை தந்து,சென்று என்றுமட்டும் கேட்கப்படலாம்


         
முதலில் படித்து,வந்து,சென்றுபோன்ற வார்த்தைகளை நன்றாகஉச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள'என்னும் சத்தத்தோடு முடியும்..
விளக்கம்:

படித்துஇதன் கடைசி எழுத்து 'து'


'
துஎன்ற எழுத்தை பிரித்தால் த்+ என்றுபிரியும்..

 
பாடி,ஆடி,ஓடி என்ற வார்த்தைகளைஉச்சரித்துப் பாருங்கள்அவ்வார்த்தைகள்'சத்தத்தில் முடியும்.
விளக்கம்:
பாடி-இதன் கடைசி எழுத்து 'டி'

 '
டிஎன்ற எழுத்தைப் பிரித்தால் ட்+என்று பிரியும்.

   
 
இப்படி வார்த்தையின் இறுதியில் ''மற்றும் ''  என்னும் சத்தம் ஒலித்தால்அது வினையெச்சம் தான் எனமுடிவெடுத்துக் கொள்ளவும்.

  (
தெரிநிலை வினையெச்சம்
  (
குறிப்பு வினையெச்சம்

என வினையெச்சம் வகைப்படும்.
.தெரிநிலை வினையெச்சம்
தெரிநிலை வினையெச்சமானதுவெளிப்படையாக காலத்தைக் காட்டி
வினைச்சொல்லைக் கொண்டு முடியும்.

(
.கா) வந்து போனான்
             
நின்று வந்தான்

.குறிப்பு வினையெச்சம்

(
.கா) அருள் இன்றி செய்தனர்
            
அறம் அல்லாது இல்லை.

 3. 
முற்றெச்சம்

         
ஒரு வினைமுற்று சொல்தன்னுடைய வினைமுற்று பொருளைதராமல்.வினையெச்ச பொருளைத் தருமாயின்அதற்கு “முற்றெச்சம்” என்று பெயர்.இச்சொல் தனித்து நோக்கும்போதுவினைமுற்றாகத் தோன்றும்இரண்டுவினைமுற்று தொடர்ந்து வருமாயின் அதுமுற்றெச்சம் ஆகிறது.
(
.கா)     சிறுவர் பாடினர் மகிழ்ந்தனர்
     
படித்தனர் தேர்ந்தனர்
     
எழுதினன் முடித்தனன

இலக்கணக் குறிப்பறிதல் - பண்புத்தொகை

பண்புத்தொகை: 

சொற்களைப் பிரித்தால் நிலைமொழியில் "மை" விகுதி பெற்றுவரும் சொற்களனைத்தும் பண்புத்தொகை ஆகும்.

"தொன்னிறம்" இச்சொல்லைப் பிரிக்கும்போது "தொன்மை+நிறம்" எனப் பிரியும். இதில் நிலைமொழியில் "மை" விகுதி சேர்ந்து வந்திருப்பதால் இச்சொல்லிற்கான சரியான இலக்கணக்குறிப்பு பண்புத்தொகையாகும்.

உதாரணச் சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
இன்னுயிர் - இனிமை + உயர் ==>பண்புத்தொகை
பைங்கூழ் - பசுமை + கூழ் ==>பண்புத்தொகை
செவ்வேள் - செம்மை + வேள் ==>பண்புத்தொகை

இவ்வாறு பண்புத் தொகையை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
மேலும் பண்புத் தொகைக்குரிய சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

1. செந்தமிழ் - செம்மை + தமிழ் ==>பண்புத்தொகை
2. நெடுந்தேர் - நெடுமை + தேர் ==>பண்புத்தொகை
3. மெல்லடி
4. கருவிழி
5. செங்கை
6. சீறடி
7. வெந்தழல்
8. பொற்காலம்
9. நற்செயல்
10. நவகவிதை
11. குறுநடை
12. நற்றூண்
13. பெருமகள்
14. பெரும்பெயர்
15. நெடும்படை
16. நெடுந்திரை
17. பேரானந்தம்
18. பேரொளி
19. நல்லருள்
20. நல்லுயிர்
21. மொய்புலி
22. வெங்கரி
23. தண்தார்
24. நற்றூண் 

ஒரு சொல் தரும் இருபொருள்

ஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும்.உதாரணம் "பார்" என்ற சொல் "காண்" பார்த்தல் என்ற பொருளில் வரும். அதேபோல "உலகம்" என்ற பொருளிலும் வரும். ஆக "பார்" என்ற சொல் பார்த்தல் அல்லது உலகம் என்ற இரு வேறு பொருளைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். இடமறிந்து இவற்றின் பொருளை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறான சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்
பார்: உலகம், காண்
இசை: புகழ், பாட்டு, இனிய ஒலி
நாண்: வெட்கப்படு, கயிறு
மெய்: உடல், மெய்யெழுத்து
திரை: அலை, திரைச்சீலை
மறை: வேதம், மறைத்து வை
பிடி: பெண்யானை, பிடித்துக்கொள்
படி: பாடம் படி, படிக்கட்டு
திங்கள்: சந்திரன், மாதம்
வலி: வலிமை, நோவு

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன? 

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.

உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும்.

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 ஆக இருக்கிறது. ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.
ஓரெழுத்து ஒரு மொழிச்  சொற்கள்
 சுட்டெழுத்துஎட்டு,சிவன்விஷ்ணுபிரம்மா
 பசு(ஆவு), ஆன்மா,இரக்கம்நினைவு,ஆச்சாமரம்
 சுட்டெழுத்துஇரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
 பறக்கும் ஈதாகுகை,தேனீ
 சிவன்ஆச்சரியம்,சுட்டெழுத்துஇரண்டு என்பதின் தமிழ் வடிவம்
 இறைச்சிஉணவுஊன்,தசை
 வினா எழுத்துஏழு என்பதின் தமிழ் வடிவம்
 அம்புஉயர்ச்சிமிகுதி
 அழகுஉயர்வுஉரிமை,தலைவன்இறைவன்,தந்தை
 மதகு, (நீர் தாங்கும் பலகை)
 பூமிஆனந்தம்
 வியங்கோள்  விகுதி
கா
 காத்தல்சோலை
கி
 இரைச்சல் ஒலி
கு
 குவளயம்
கூ
 பூமிகூவுதல்உலகம்
கை
 உறுப்புகரம்
கோ
 அரசன்தந்தை,இறைவன்
கௌ
 கொள்ளுதீங்கு
சா
 இறத்தல்சாக்காடு
சீ
 லட்சுமிஇகழ்ச்சி,வெறுப்புச் சொல்
சு
 விரட்டடுதல்சுகம்,மங்கலம்
சே
 காலை
சை
 அறுவறுப்பு ஒலி,கைப்பொருள்
சோ
 மதில்அரண்
ஞா
  பொருத்துகட்டு
தா
 கொடுகேட்பது
தீ
 நெருப்பு , தீமை
து
 உண்
தூ
 வெண்மைதூய்மை
தே
 கடவுள்
தை
 தமிழ்மாதம்தைத்தல்,பொருத்து
நா
 நான்நாக்கு
நி
 இன்பம்அதிகம்,விருப்பம்
நீ
 முன்னிலை ஒருமை,நீக்குதல்
நூ
 யானைஆபரணம்,அணி
நே
 அன்புஅருள்நேயம்
நை
 வருந்து
நோ
 துன்ப்பபடுதல்நோவு,வருத்தம்
நௌ
 மரக்கலம்
 நூறு
பா
 பாட்டுகவிதை
பூ
 மலர்
பே
 நுரைஅழகுஅச்சம்
பை
 கைப்பை
போ
 செல்ஏவல்
 சந்திரன்எமன்
மா
 பெரியசிறந்தஉயர்ந்த,மரம்
மீ
 மேலே , உயர்ச்சிஉச்சி
மூ
 மூப்புமுதுமை
மே
 மேல்
மை
 கண்மை (கருமை),அஞ்சனம்இருள்
மோ
 மோதல்முகரதல்
 தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
யா
 ஒரு வகை மரம்யாவை,இல்லை
 நாலில் ஒரு பங்கு "கால்"என்பதன் தமிழ் வடிவம்
வா
 வருகஏவல்
வி
 அறிவுநிச்சயம்,ஆகாயம்
வீ
 மலர் , அழிவு
வே
 வேம்புஉளவு
வை
 வைக்கவும்கூர்மை
வௌ
 வவ்வுதல்
நோ
 வருந்து
 தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு
 நான்கில் மூன்று பகுதி,முக்கால் என்பதன் வடிவம்
று
 எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

ஒரு பொருள் தரும் பல சொற்கள்

தமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்...

பொதுவாக சூரியனை "சூரியன்" என நாம் அழைத்தாலும், அதற்கு தமிழில் வேறுப்பட்ட சில பெயர்கள் இருக்கின்றன. ஞாயிறு என்றாலும் சூரியனைக் குறிக்கும், கதிரவன் என்றாலும் சூரியனைக் குறிக்கும், ஆதவன் என்றாலும் சூரியனைக் குறிக்கும். பகலோன் என்றாலும் சூரியனைக் குறிக்கும். பரிதி என்றாலும் சூரியனையே குறிக்கும் சொல்லாகும்.

இவ்வாறு ஒரு பொருளைக் குறிக்க பல்வேறு சொற்கள் தமிழில் உள்ளன. அவற்றை ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.


கடல் - பரவை, முந்நீர்
கிளி - தத்தை, சுகம், கிள்ளை
குழந்தை - மகவு, குழவி, சேய்
சூரியன் - ஞாயிறு, கதிரவன், பகலோன், பரிதி
செய்யுள் - பா, கவிதை, யாப்பு
சொல் - பதம், மொழி, கிளவி
தவறு - மாசு, குற்றம், பிழை
நெருப்பு - தீ, அனல், கனல்
பெண் - நங்கை, வனிதை, மங்கை
வயல் - கழனி, பழனம், செய்

இதுபோன்று ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் தமிழில் வழக்கில் உள்ளது.

எழுத்துகளின் வகைகள்:
முதலெழுத்துகள்: 
மொழியில் முதலாவதாக வரக்கூடியதும் தனித்து இயங்கக்கூடியதும் ஆகியஎழுத்துகளைத்தான் முதலெழுத்துகள் என்கிறோம். அதாவது அரிச்சுவடியில்இருக்கிற அ முதல் ஔ வரை உள்ள 12உயிரெழுத்துகளும் எழுத்துகளும் நெட்டுவரிசையில் க முதல் ன வரை உள்ள 18மெய்யெழுத்துகளும் கூடிய மொத்தம் 30எழுத்துகளைத்தான் முதலெழுத்துகள் என்கிறோம்.
சார்பெழுத்துகள்: 
சார்பெழுத்துகள் என்பது முதலெழுத்துகளைச் சார்ந்து வரக்கூடியஎழுத்துகளாகும். இச் சார்பெழுத்துகள் தனித்து இயங்காது. எனவே தான் இவற்றை சார்பெழுத்துகள் என்கிறோம். அதாவது முதலெழுத்துகளைச் சார்ந்துபின்தொடர்ந்து வருவதால் இவற்றை சார்ப்பெழுத்துகள் என்கிறோம்.
 
இச்சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். இவற்றைப் பற்றி முழுமையாக அடுத்தப் பதிவில் பார்ப்போம்.
உயிரெழுத்துகள்: 
உயிரெழுத்துக்கள் என்பது மொழிக்கு உயிராய் இருப்பது. தமிழ் மொழியில் உயிரெழுத்துக்கள் 12 என்பதை முன்னரே பார்த்தோம்.,,,,,,,,,,, ஆகிய எழுத்துகள் உயிரெழுத்துகள் என அழைக்கப்படுகிறது.
மெய்யெழுத்துகள்:
தமிழ் மொழிக்கு மெய்யாக இருப்பது மெய்யெழுத்துகள். 'மெய்என்றால் உடம்பு என பொருள்படும். க்ங்ச்ஞ்ட்,ண்த்ந்ப்ம்ய்ர்ல்வ்ழ்ள்ற்ன் என்பவை மெய்யெழுத்துகளாகும்.

தமிழ் இலக்கணம் யாப்பு தமிழ் இலக்கண யாப்புஒரு எளிய அறிமுகம்      தமிழ் இலக்கணம் யாப்பு  தமிழ் இலக்கண யாப்புஒரு  எளிய அறிமுகம்  Reviewed by Bright Zoom on January 04, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.